மருதநாயகம் படத்தின் பாடலை ட்விட்டரில் பதிவிட்ட கமல்.! வைரலாகும் பாடல் வரிகள்.!

0
1687
Maruthanayagam Song
- Advertisement -

தமிழகம் முழுவதும் கடந்த 18ம் தேதி மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை நடைபெற்றது. 

-விளம்பரம்-
Image result for பொன்பரப்பி

திருமாவளவனின் தோ்தல் சின்னமான பானையை சிலா் சாலையில் போட்டு உடைத்துள்ளனா். இதனால் விடுதலை சிறுத்தை கட்சிக்கினருக்கும் பா ம க காட்சியனருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையும் படியுங்க : நாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் இருந்த இவானாவா இது.! பாத்தா நம்பமாடீங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் பொன்பரப்பி  சம்பவத்தை குறிப்பிட்டு நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தில் இளையராஜாவுடன் இணைந்து எழுதிய பாடல்களின் வரிகளை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்
‘மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல்.

300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும்  அவமானம்’ என்று ட்வீட் செய்துள்ளார். மருதநாயகம் திரைப்படத்தை பணிகள் 1997 ஆம் தொடங்கி பின்னர் கைவிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement