40 வருஷம் எப்படி போச்சுன்னு தெரியல – சூப்பர் ஹிட் அடித்த படத்தில் தனது உருவத்தையே மாற்றிய மேக்கப் கலைஞரை சந்தித்த கமல்

0
1990
Kamal
- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பின் ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை கமலஹாசன் சந்தித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
avvai

மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

கமல் நடிக்கும் படம்:

பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வினோத் இயக்கும் படத்திலும், மணிரத்தினம் இயக்கும் படத்திலும் கமல் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அதேபோல் இவர் நீண்ட இடைவெளிக்கு பின் பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார். தற்போது கமல் அவர்கள் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில்நடிக்கிறார்.

ப்ராஜெக்ட் கே படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கமல் 21 கெட்டப் போட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்தப் படத்திற்கு கல்கி 2898AD என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

கமல்-மைக் வெஸ்ட்மோர் சந்திப்பு:

வைஜெயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனிடையே அமெரிக்க நாட்டின் சாண்டியோகோ நகரில் நடைபெற்ற காமிக்கான் இன்டர்நேஷனல் விழாவில் ப்ராஜெக்ட் கே படம் குறித்து சில அப்டேட்டுகளை வெளியிட்டு இருந்தார்கள். அந்த நிகழ்வில் பிரபாஸ், கமலஹாசன், ராணா உட்பட பலர் பங்கு பெற்றிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்வில் ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இவரை கமலஹாசன் சந்தித்து பேசி இருக்கிறார்.

மைக் வெஸ்ட்மோர்-கமல் நட்பு:

40 ஆண்டு காலமாக இவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. காரணம், கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களில் ஒப்பனை கலைஞராக மைக் வெஸ்ட்மோர் தான் பணியாற்றி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசனும் மைக் வெஸ்ட்மோரும் சந்தித்த போது பல விஷயங்களை பேசி மகிழ்ந்திருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறார். ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement