பாகுபலி படத்திற்கு பின்னர் மற்ற மொழி ரசிகர்களும் தெலுங்கு படம் பார்ப்பது அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அதற்கு ஏற்றார் போல தெலுங்கிலும் பல அதற்கு படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அவை தமிழும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் தேவர்கொண்டா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இதையும் பாருங்க : ஜிம்மில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஷாலினி பாண்டே..!ஷாக்கடைந்து புலம்பிய ரசிகர்கள்..!
அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்த நடிகை ஷாலினி பாண்டே தற்போது தமிழில் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் 100 பர்சன்ட் காதல், ஜீவாவுடன் கொரில்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் அடுத்தடுத்து வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியையும் கற்று வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலினி பண்டேவிடம் தமிழில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அவருடன் நடித்தால் அவ்ரது பெண் போல இருக்கிறேன் என்று கிண்டல் செய்வார்கள். தனுஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவருடைய நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.