என்னங்க பாகுபலி, Kgf, RRR – 30 ஆண்டுக்கு முன்பே Pan இந்தியா அந்தஸ்தத்தை பெற்ற கமலின் படம் பற்றி தெரியுமா ?

0
848
kamal
- Advertisement -

pan இந்திய படம், சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு சொல். சமீப காலமாகவே திரைத்துறையில் வெளியாகும் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அதற்கு Pan இந்தியா படங்கள் என்று பெயர் வைத்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மற்றும் பிரம்மாண்ட செலவில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகிவிடுகிறது. பொதுவாக தமிழ் நடிகர்களின் படங்கள் தான் மற்ற மொழிகளில் வெளியாகும். மற்ற மொழி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியாவது குறைவு தான்.

-விளம்பரம்-

ஆனால், இந்த கூற்றை மாற்றியது பாகுபலி திரைப்படம் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரண்டு மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடைந்தது. இதனை தொடர்ந்து வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுகு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து Pan இந்திய படம் என்ற அந்தஸ்தை பெற்றது.

- Advertisement -

pan இந்திய படங்களாக வெளிவரும் வேற்று மொழி படங்கள் :

அதன் பின்னர் வந்த பாகுபலி 2வும் சரி, சமீபத்தில் வந்த புஷ்பா, RRR படமும் சரி Pan இந்திய லெவலில் வெற்றி பெற்றது. இப்படி தெலுங்கு படங்கள் Pan இந்திய அந்தஸ்தை பெற்று வந்த நிலையில் கன்னடத்தில் வெளியான Kgf திரைப்படமும் இந்திய அளவில் வெற்றி பெற்று Pan இந்தியா அந்தஸ்த்தை பெற்றது. ஆனால், தமிழ் சினிமாவில் சமீப காலமாக pan இந்திய அளவில் கொண்டாடப்பட்ட படங்கள் வெளியாகவில்லை.

Pan இந்திய அந்தஸ்த்தில் வந்த 2.0:

இறுதியாக ரஜினி நடித்த 2.0 திரைப்படம் தான் இந்திய அளவில் வெற்றி பெற்று அப்படி ஒரு அந்தஸ்தை பெற்றது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல், விக்ரம் என்று டாப் நடிகர்கள் இருந்தும் சமீப காலமாக இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த படம் வெளியாகவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சமீபத்தில் வந்த தமிழ் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களாலேயே கொண்டாடப்பட தவறியது.

-விளம்பரம்-

அபூர்வ சகோதரர்கள் :

இதனால் தமிழ் சினிமா Pan இந்திய படங்களை எடுக்க தகுதியை இழந்துவிட்டதா என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்தது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பே pan இந்திய அந்தஸ்தை தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்தது ஒரு படம். அது வேறு எதுவும் இல்லை கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் தான். 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ், இந்தி கன்னடம், தெலுகு என்று பல மொழிகளில் அப்போதே வெளியாகி அணைத்து மொழியிலும் வெற்றி பெற்று Pan இந்தியா அந்தஸ்த்தை பெற்றது.

பல மொழிகளில் 100 நாள் ஓடிய படம் :

அணைத்து மொழிகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படம் அப்போதே பல வசூல் சாதனைகளை செய்தது. இந்த படத்தில் கமல் எப்படி குள்ளமாக நடித்தார் என்று இன்று வரை பேசப்பட்டு தான் வருகிறது. அவ்வளவு ஏன் இந்த படத்தை தழுவி ஷாருக்கான் கூட கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீரோ என்ற படத்தை வெளியிட்டார். ஆனால், அந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை தான் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement