தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். நடிப்பையும் தாண்டி நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமலுக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், கமல் மட்டும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார். அந்த அளவிற்கு பிக் பாஸ் மேடையை தவறவிடாமல் கெட்டியாக பிடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கமல், பிக் பாஸ்ஸில் வாங்கும் சம்பளம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். வருகிற சட்ட மன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதில் நடிகர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தான் பாஜக கட்சி சார்பாக வாழ்த்தி ஸ்ரீநிவாசனுக்கு சீட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய கமல், வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருக்கிறார்.
இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவி ஆரம்பித்த புதிய நிகழ்ச்சி – இதோ ப்ரோமோ.
கமல் பேசியதாவது, இங்கே பாராளுமன்றத் தேர்தலில் 39 பேர் போயிட்டு வந்தாங்க அவங்க வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்தார்களே அதையெல்லாம் நிறைவேற்றினார்கள் அதை நிறைவேற்ற அவர்கள் இதை மட்டும் நிறைவேற்றுவார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் நிறைவேற்ற மாட்டார்கள் அதற்கு தேவையும் இல்லை ஏனென்றால் பல தலைமுறைக்கு சேர்த்து சேர்த்து வச்சாச்சு. அங்கே இருக்கும் பேராண்டிகள் கொள்ளுப்பாட்டனாக ஆகும் போது கூட அவர்களிடம் பணம் இருக்கும். ஆனால், நான் அப்படி சொல்ல முடியாது. நான் சம்பாதிச்சா தான் பணம்.
வீடியோவில் 40 நிமிடத்தில் பார்க்கவும்
நான் பணம் செலவு பண்ண பிறகு அடுத்து நடிக்கப் போய் விடுவார் என்று வானதி அம்மா சொல்கிறார். ஆமாம், நான் போவேன். அதில் எனக்கு எந்த அவமானமும் கிடையாது. அது நேர்மையான தொழில் ஆனால், அரசியல் தொழில் அல்ல. ஆனால், இப்போது நான் எப்படி 6 கோடி செக்கில் கையெழுத்து போட்டுவிட்டு தைரியமாக சொல்கிறேன். நான் பிக்பாஸில் கனமான சம்பளத்தை சுண்டி வாங்குகிறேன். வேற யாருக்கும் இவ்வளவு சம்பளம் கிடையாது. அதனால் நான் அதை பெருமையாக சொல்லவில்லை. என்னுடைய தேவையை அப்படி. என் என்னுடைய செலவுக்கு மட்டும் வேலை செய்யவில்லை நமக்காக. அதுவே பத்தல தானாகவே அது வேறு விஷயம். அதனால்தான் சொல்கிறேன். எனக்கு அதிகாரத்தை கொடுங்கள் உங்களுக்காக தேவையான பணமும் கையில் இருக்கும் அதை தொட மாட்டேன் என்று கூறியுள்ளார்.