தசாவதாரத்த விடுங்க இந்த படத்த எப்படி சார் எடுத்தீங்க- பிரேமம் இயக்குனர் சந்தேகத்திற்கு கமல் கொடுத்த பதில்.

0
7883
kamal
- Advertisement -

பிரேமம் இயக்குனர் கேட்ட கேள்விக்கு நடிகர் கமல் அளித்த பதில் சமூக வலைதளத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் மலையாளத்தில் தான் வெளிவந்தது. தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள படம் தான் பிரேமம். பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கமலின் இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்து சந்தேகங்களை கேட்டுள்ளார். கமலின் கதையில் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம் படம் கமலின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதையும் பாருங்க : ப்பா, ஜெமினி படத்திற்கு முன் கிரண் எப்படி இருந்திருக்கார் பாருங் – என்ன ஒரு ஷேப்பா இருந்திருக்காங்க.

- Advertisement -

இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் கமல் இந்த படத்தில் வந்த 10 அவதாரங்கள் பற்றிய பல்வேறு ஸ்வாரசியான தகவல்களை பகிர்ந்து இருந்தார். இதற்கு அல்போன்ஸ் புத்திரன், உங்களின் தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல. இந்த படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா’ என்று கேள்வி கேட்டிருந்தார்.

அல்போன்ஸ் புத்திரனின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement