கமல் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படம் அட்ட காப்பி என்ற புது சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். அதோடு தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன்.
மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.
KH234 படம்:
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து பல படங்களில் கமல் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது கமல் நடிக்கும் படம் KH234. இந்த படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:
கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. மேலும், இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இன்ட்ரோ வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், கமலஹாசன் தன்னுடைய பெயரை ரங்கராய சக்திவேல் நாயகன் என்று கூறுகிறார். பின் கத்தி, கோடாரி, தீ பந்தம், அருவா போன்ற ஆயுதங்களை கொண்டு தன்னை தாக்க வரும் ஐந்து பேரையும் அடித்து துவம்சம் செய்கிறாய் கமல்.
தக் லைஃப் படத்தின் இன்ட்ரோ வீடியோ:
பின் காளை தன்னை தாக்க வருவது இது முதல் முறை அல்ல, கடைசி முறையும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்று தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த தக் லைஃப் படத்தின் இன்ட்ரோ வீடியோ ஒரு அட்ட காப்பி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கிண்டல்:
அதாவது, 2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த படம் ‘Rise Of Skywalker’. இந்த படத்தில் நடிகர் மார்க் ஹாமில், கேரி பிஷ்ஷர், டெய்சி ரிட்லி, ஜான் பொய்யிகா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை தான் அப்படியே தக் லைஃப் படத்தின் இன்ட்ரோ வீடியோவில் இருக்கிறது. இது முழுக்க முழுக்க அட்டகாப்பி என்று ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஒருவேளை இந்த படமும் அந்த படத்தின் காப்பியாக இருக்குமா? என்றும் கூறி வருகிறார்கள்