ஓகே ஓகே பட ஜாங்கிரி புகழ் மதுமிதாவிற்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் தெரியுமா.!

0
1873
Jangiri-Madhumitha
- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகியாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்திருந்தனர் மதுமிதா. இந்த படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார். அவரின் தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.  

- Advertisement -

சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு தனது திருமணம் குறித்து பேசிய மதுமிதா, 2019-ல் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்தேன். தற்போது சில படங்களில் நடித்துவருகிறேன். என்னுடைய தாய்மாமா மகன் மோசஸ் ஜோயல், குறும்பட இயக்குநர். அதோடு பிரபல சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார்.

அவர், இந்தத் துறையில் இருப்பதைப் பார்த்துதான் நானும் நடிக்க வந்தேன். இப்போது அவர்தான் என்னுடைய வாழ்க்கையிலும் துணையாக வரப்போகிறார். என்னுடைய அப்பா வண்ணை கோவிந்தன், அ.தி.மு.கவின் பேச்சாளர். அவர் மறைவுக்குப் பிறகு போராடி வாழ்க்கையில் முன்னேறியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement