என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை, அப்புறம் ஏன் சினிமால வச்சீங்ன்னு கேட்டா – கமல் விளக்கம்.

0
360
- Advertisement -

படங்களில் ஜாதி பெயர் இடம் பெறுவது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கமலஹாசன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், கமல் அவர்கள் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பின் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கமல் பிரச்சாரம் செய்து இருந்தார். இதை தொடர்ந்து 142 சட்டமன்றத் தொகுதிகளில் கமல் தொடர்ந்து நிறுத்தினார். அதோடு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பின் மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், விடாமுயற்சியுடன் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை நடத்தி வருகிறார். பின் சமீபத்தில் கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார். இதற்கு பலரும் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பாராளுமன்ற தேர்தல்:

அந்த வகையில் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கமலஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதை அடுத்து பலரும் கமல்ஹாசன்-திமுக கூட்டணி வைக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கேற்ப தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

கமல்ஹாசன்-திமுக கூட்டணி:

மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று கூட்டணி அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. அந்த வகையில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது. இதனை அடுத்து கமலஹாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, வர இருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களுடைய எல்லா ஆதரவும் கிடைக்கும்.

-விளம்பரம்-

கமல் தேர்தல் பிரச்சாரம்:

இது பதவிக்கான விஷயம் கிடையாது, நாட்டுக்கான விஷயம். இதனால் எங்கு கைகுலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சார செய்யும் தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து கமலஹாசன் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு டிவியில் திமுக விளம்பரம் பார்த்து டிவியை ரிமோட் கொண்டு உடைத்தது குறித்த சர்ச்சைக்கு கமலஹாசன் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய படங்களில் ஜாதி பெயர் இடம் பெறுவது குறித்து கமலஹாசன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சாதி பெயர் படங்கள் குறித்த விளக்கம்:

அதில், என்னுடைய வாழ்க்கையில் ஜாதிக்கு என்றுமே இடம் கிடையாது. அப்படித்தான் என்னுடைய சினிமாவும் இருக்கிறது. பிறகு ஏன் உங்கள் சினிமாவில் ஜாதி பெயர் இருக்கிறது? என்று கேட்பார்கள். ஆல்கஹாலின் கொடுமைகளை பற்றி நான் படம் எடுத்தால் அதனுடைய முக்கியமான பாத்திரம் ஒரு குடிகாரனாக இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது. அதேபோல ஜாதி வெறியனை மையப்படுத்தி தான் படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழாய் போன கதையையும் பண்பட்ட கதையும் சொல்வது தான் ஜாதியை உயர்த்தி பிடிப்பதாகாது விமர்சிப்பதாகும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement