-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அப்போ இருந்த மாதிரி விஜய் சேதுபதி இப்ப இல்ல – வெளிப்படையாக பேசிய வேல ராமமூர்த்தி

0
365

விஜய் சேதுபதி குறித்து எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேலராமமூர்த்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வேலராமமூர்த்தி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மதயானை கூட்டம் என்ற படத்தில் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் வேலராமமூர்த்தி.

வேலராமமூர்த்தி பேட்டி:

முதலில் இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து தான் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு தான் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார். பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் வேலராமமூர்த்தி என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து கூறியிருந்தது, நானும் விஜய் சேதுபதியும் சேர்ந்து சங்கத் தலைவன் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அதற்குப் பிறகு சங்குதேவன் என்ற படத்தில் நானும் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்தோம்.

விஜய்சேதுபதி குறித்து சொன்னது:

-விளம்பரம்-

சங்கு தேவன் என்ற படம் தெருக்கூத்து கலைஞர், செவ்வாய் தோஷம் என்று ஒரு அருமையான கதை. அதில் நான் தெருக்கூத்து கலைஞர் என்றதுமே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், அப்போது அந்த படத்தோட இயக்குனர் சுதாகருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது. அதனால் அவர் எடுத்த சீனையை திரும்பத் திரும்ப எடுத்து அந்த படமே டிராப் ஆகிவிட்டது. அப்போ இருந்தே விஜய் சேதுபதி வேற. ஆனால், அவர் சேதுபதி படத்தில் நடிக்க வரும்போது வேறு. ஒரு நல்ல விஜய் சேதுபதி தான் இருந்தார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி குறித்த தகவல்:

அதுபோல ரணசிங்கம் படத்தில் நடிக்க வரும்போது அதைவிட வேறு சேதுபதி பார்க்க முடிந்தது. உருமாற்றம் குணமாற்றம் என்று காரல் மார்க்ஸ் சொல்லுவாரே அதுபோல் விஜய் சேதுபதி மாறி இருந்தார் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது.

விஜய்சேதுபதி படங்கள்:

மேலும், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர், தெலுங்கு படம், கமலஹாசன் நடித்த விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜவான். இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news