விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது . 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது.
இதையும் பாருங்க : சினிமாவிற்கு வரும் முன், வெறும் 750 ரூபாய்க்கு விஜய் சேதுபதி பார்த்துள்ள வேலை – என்ன தெரியுமா ? வீடியோ இதோ.
இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். இர்பான், நிஷா கணேஷ், பிரியா அட்லீ, பாலாஜி, என்று பல்வேறு நபர்களுக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கான காணும் காலங்கள் பிரபலங்கள் இணைந்து ‘பட்டாளம்’ என்ற படத்திலும் நடித்தனர்.
அந்த படமும் அப்போதைய இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த சீரியலில் நடித்த பலர் தற்போது அட்ரஸ் இல்லாமல் ஆகிவிட்டனர். பச்சை எல்லாம் தற்போது எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. இந்த நிலையில் கனா காணும் காலங்கள் பிரபலங்கள் ரீ -யூனியன் வைத்து ஒன்றாக சந்தித்து உள்ளார்கள்.