கைவிட்ட சினிமா வாய்ப்பு, மாஸ்க் போட்டு சர்வராக வேலை செய்த கனா காணும் நடிகர்.!

0
15658
irfaan
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான காண காணும் காலம் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் பல்வேறு நடிகர்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் கனா காணும் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் இர்பான்.

-விளம்பரம்-
Image result for kana kanum kalangal

இந்த சீரியல் கல்லூரி, பள்ளி மாண மாணவிகளை மிகவும் ஈர்த்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர், சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்துவிட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இப்படி தான் கவினுக்கு அதிக வாக்கு வருகிறது.! புதிய சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி பிரபலம்.! வீடியோ.!

இதுவரை தமிழில்  ‘பட்டாளம்’ , ‘சுண்டாட்டம்’, ‘ரூ’, ‘பொங்கி எழு மனோகரா’ன்னு அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார் இர்பான். ஆனால், அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள இவர் ஹோட்டலில் வேலை செய்துள்ளதாக குறியுளளார்.

-விளம்பரம்-
irfan

அந்த பேட்டியில் பங்கேற்றுள்ள அவர் பேசுகையில், என்னதான் ஃபேமிலி சப்போர்ட் இருந்தாலும், எதுக்கும் ஒரு கால அளவு இருக்கில்லையா? நிரூபிச்சுக் காட்டின பிறகு கிடைக்கற மதிப்புதானே அழகு? கையில இருந்த காசு கரைஞ்சு என் தேவைக்கே திண்டாடற ஒரு சூழல். எதுவும் பண்ணாம வீட்டுல இருந்து பணம் வாங்கவும் தயக்கம். ஃப்ரெண்ட் ஒருவன் சென்னையில மார்டனா ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சிருந்தான். ‘மச்சான் அதுல ஏதாச்சும் ஒரு வேலை கொடுடா’னு கேட்டேன். ‘ஹோட்டல்ல என்னடா செய்வ’னு கேட்டான். பண உதவி தரவும் தயாரா இருந்தான். அப்படி வேணாம்னுட்டு அந்த ஹோட்டல்ல சர்வரா சேர்ந்துட்டேன். சீரியல் மூலமா மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆன பிறகு ஒரு சர்வரா அந்த மக்களையே சந்திக்கறது எப்படி இருக்கும்?

மூக்கு வரைக்கும் மறைச்சு, மாஸ்க் போட்டபடி சர்வ் பண்ணத் தொடங்கினேன். ஹோட்டல்ல ஒருநாள் ஒரு கஸ்டமருக்கு அவர் கேட்காததைத் தந்துட்டதா பிரச்னை. கன்னா பின்னானு கத்துறார். ‘ஸாரி சார்’னு சொல்லிட்டே இருக்கேன். கத்திட்டே இருந்தவர் சில செகண்ட்ல திடீர்னு அமைதியானார். அடுத்த நொடி, ‘தம்பி, நீங்க ‘சரவணன் மீனாட்சி’ இர்ஃபானா’ங்கிறார். என்னோட வாய்ஸை வச்சுக் கண்டுபிடிச்சுட்டார். அக்கம்பக்கத்துல இருந்தவங்களுக்குக் கூட அவர் சொன்னது கேட்டுடுச்சு, உடனே அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்று தனியாக அமர்ந்து அழுது கொண்டேன்.அதை மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

Advertisement