நான் முடிய வெட்ட மாட்டேன்னு சொன்னதால என்னையே Wig வாங்கிட்டு வர சொன்னாங்க, அதோட விலைய கேட்டா ஷாக்காவீங்க ? தீபிகா கொடுத்த ஷாக்.

0
1320
deepika
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பல்வேறு சீரியல்கள் இன்று சின்னத்திரையில் வந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் நிறைந்திருக்கும். இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே அதற்கு பிறகு வந்த கல்லூரி என்ற இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

டிக் டாக் பிரபலங்களுக்கு வாய்ப்பு :

இப்படி ஒரு நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது. டிவியில் ஒளிபரப்பாகி இருந்தால் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். பொதுவாகவே சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் டிக் டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய சோஷியல் மீடியாவில் வெளியாகும் வீடியோக்களின் மூலம் தான் நடிகர்கள் அதிகம் நடித்து வருகிறார்கள்.

சோசியல் மீடியா மூலம் பிரபலமான பல பேருக்கு வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்து வருகிறார். இதுகுறித்து பதிவிட்ட அவர் விஜய் டிவியில் வந்த கனாக்காணும் காலங்கள் சீரியலை நான் வேகமாக ஓடிச்சென்று பார்த்தேன். அந்த அளவிற்கு இந்த சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

டிக் டாக் தீபிகா :

ஆனால், தற்போது அந்த சீரியலில் நடிக்கப் போகிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறி இருந்தார். இவர் டிக் டாக் செயலியில் பல்வேறு ரீகிரியேஷன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். இந்த தொடரில் இவர் ஒரு டாம் பாய் லுக்கில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் அவரின் விக் குறித்து கேட்கப்பட்டு இருந்தது.

Wig-ன் விலை :

இதற்கு பதில் அளித்த அவர் ‘நிறைய பேர் இதை தான் கேட்கிறார்கள். ஆனால், இது விக் தான். என்னுடைய உண்மையான ஹேர் ஸ்டைல் இதுதான்’ என்று தனது விக்கை கழட்டி தனது அழகிய கூந்தலை காட்டி இருக்கிறார். மேலும், முதலில் என் முடியை எடுக்க சொன்னார்கள் ஆனால், நான் முடியை வெட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். மேலும், விக் ஒரு 1500ரூபாய் இருக்கும் என்று தான் நினைத்தேன். ஆனால், நேரில் சென்று கேட்டால் இது 20ஆயிரம், 30 ஆயிரம், 1லட்சம் என்று சொன்னர்கள். பின் அவர்களே விக்கை ரெடி செஞ்சார்கள் அதன் விலை 25ஆயிரம். ஆனால், அதற்கு நீ தான் காசு கொடுக்க வேண்டும் சென்று சொல்லிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement