எனக்கு ஏன் இந்த இடம். ரஜினி, விஜய் போன்றவர்களின் வருமானத்தை வெளியிட்ட போர்ப்ஸ் நிறுவனத்திற்கு நடிகை நோட்டீஸ்.

0
23689
kangana

சினிமா துறை சார்ந்த பங்களிப்பு, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் இந்தப் பட்டியலை தயாரிக்கப்படுகிறது. அதில், இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டுவோரின் டாப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதிகமான வருமானம் ஈட்டுவோரை கணக்கு எடுத்து வருடம் வருடம் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் சிறந்த பிரபலங்களுக்கான பட்டியலை வெளியிடுவது மட்டுமில்லாமல் பல தொழில்களில் பிரபலமாக இருப்பவர்கள் பெயர்களையும் வெளிவிடும்.

- Advertisement -

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிக வருமானம் பெற்ற நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைவரின் பட்டியலும் கடந்த வாரம் அமெரிக்க இதழான போஸ்ட் நிறுவனம் வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலியின் பெயரும் இடம் பெற்று உள்ளது. இவர் ரூ. 252 கோடி வருமானம் ஈட்டி முதல் இடம் பிடித்து உள்ளார். இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் என அடுத்த அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : மூத்த மகன் தலைவர் மாதிரியே இருக்கார். தனுஷ் மகன்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்திற்கு கமன்ட் செய்யும் ரசிகர்கள்.

அமிதாப்பச்சன் 4வது இடத்தை பிடித்து உள்ளார். இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் இடம் பிடித்து உள்ளனர். இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 13 வது இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்துக்கு பிறகு முடிசூடா மன்னராக விளங்கி வருபவர் விஜய். விஜய் அவர்கள் 47 வது இடத்தையும், கமல்ஹாசன் 56வது இடத்தையும், கங்கனா ரனாவத் 70வது இடத்தையும் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர்கள் எப்போதும் தங்களுடைய வருமானம் குறித்து வெளிப்படையாக பேசாத நிலையில் அவர்களின் வருமானத்தை வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம்.

-விளம்பரம்-
Image

மேலும், நட்சத்திரங்களும் இந்த வருமான பட்டியலை கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். தற்போது நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சையை எழுப்பி உள்ளார். வருமான வரி பிரச்சனை வருவதனால் தான் நடிகர்கள் எப்போதுமே தங்களுடைய வருமானம் சம்பந்தப்பட்ட தகவலை வெளிப்படையாக சொல்வதில்லை. ஆனால், கங்கனா ரனாவத் அவர்கள் அதற்கு நேர்மாறாக குரல் எழுப்பியிருக்கிறார். இவர் எப்போதும் சரியாக தன்னுடைய வருமான வரியை செலுத்திவிடுவார். ஏற்கனவே போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் செய்ததை குறித்து டுவிட் செய்த கங்கனாவின் சகோதரி ரங்கோலி தற்போது சம்பந்தப்பட்ட இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அதில் அவர் கூறியது, இதுவரை வருமான வரியாக 17 கோடி ரூபாயை கங்கனா ரனாவத் செலுத்தி இருக்கிறார். ஆனால், அவரது வருமானமோ 17.5 கோடி என்றும், 70 ஆவது இடத்தில் அவர் இருப்பதாகவும் பட்டியலிடப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும்? அவரது வருமானம் முழுவதும் இரகசியமாக ஒரு டீம் பராமரித்து வருகிறார். அதற்கான வருமான வரி கணக்கும் சரியாக உள்ளது. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் கங்கனா ரனாவத் எதன் அடிப்படையில் 70வது இடத்தில் சேர்த்தீர்கள். இது குறித்து ஏற்கனவே பல கேள்விகள் கேட்டபோது சரியான பதில் நீங்கள் அளிக்கவில்லை என்ற காரணத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்று கூறி இருந்தார்.

Advertisement