கண்ணே கலைமானே சீரியலில் ஹீரோவை தொடர்ந்து இயக்குனர் மாற்றம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புது புது வித்தியாசமான கதைகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் கண்ணே கலைமானே.
இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொடரில் ஹீரோவாக முதலில் நந்தா மாஸ்டர் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இது குறித்து பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் இவர் ஷூட்டிங் போது கீழே விழுந்ததில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இதனால் இவர் தொடரில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.
கண்ணே கலைமானே தொடர்:
அதோடு நான் கீழே விழுந்து அடிபட்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தும் நடித்துக் கொடுக்க சேனல் தரப்பிலிருந்து வற்புறுத்தினார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது நந்தா அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்ற தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், கண்ணே கலைமானே தொடரில் வேறு ஒரு நடிகர் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.
இயக்குனர் ராஜா தனுஷ் மாற்றம்:
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இயக்குனர் ராஜா தனுஷும் திடீரென்று மாற்றப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம், இயக்குனர் ராஜா தனுஷ்க்கும் கேமராமேனுக்கும் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சீரியல் சார்பில் கூறியிருந்தது, ரொம்ப நாளாகவே இந்த சீரியலை ராஜா தனுஷ் தான் இயக்கிக் கொண்டு வந்தார். ஆனால், அவர் ஆர்டிஸ்டிகல், டெக்னீசியர்களிடம் நட்பாக நடந்து கொள்ள மாட்டார். அது ஒன்னு தான் இவரிடம் இருக்கும் பிரச்சினை.
இயக்குனர் குறித்து சொன்னது:
சில மாதங்களுக்கு முன்பு ஹீரோ நந்தா மாஸ்டர் தொடரில் இருந்து விலகியதற்கு இவரும் ஒரு காரணம். காலில் அடிபட்டு சில நாட்கள் ஓய்வு தேவை என்று அவர் கேட்டும் அனுமதி கொடுக்க முடியாது என்று இயக்குனர் சொன்னார். அதனால் தான் நந்தா சீரியலை விட்டு விலகிவிட்டார். இப்போது தொடரில் கேமரா மேனாக பணிபுரிந்து வருபவருக்கும் இவருக்கும் சூட்டிங் போது ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது வளர்ந்து ஒரு கட்டத்தில் கேமராமேனை தூக்கி விடுவதாக சொல்லி இருக்கிறார். இந்த பிரச்சனை சேனல் மட்டும் தயாரிப்பு தரப்பின் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
சீரியலை விட்டு விலக காரணம்:
இதனால் அவர்கள், எப்படி நீங்கள் இந்த முடிவை எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். பின் இந்த விவகாரத்தை கேமரா மேன், கேமரா மேன் அசோசியேஷன்க்கு கொண்டு சென்றிருந்தார். இது குறித்து அவர்கள் சேனல் தரப்பிடம் முறையிட்டு இருக்கிறார்கள். பின் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் சீரியலை புறக்கணிக்க வேண்டிவரும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இதை தொடர்ந்து சீரியல் தயாரிப்பு தரப்பு மற்றும் சேனல் இயக்குனரை தூக்கி விட்டார்கள். தற்போதுராஜா தனுசுக்கு பதிலாக இந்த தொடரை பஷீர் என்பவர் இயக்கி வருகிறார் என்று கூறியிருக்கிறார்கள்.