தோனியை தொடர்ந்து ‘கபில் தேவ்’ வாழ்கை வரலாறு படம்.! நடிகர் யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே!

0
713
Ranveer-Singh
- Advertisement -

கடந்த சில ஆண்டுகக்களாக இந்திய கிரிக்கெட்அணியில் உள்ள பல்வேறு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக போகிறது.

-விளம்பரம்-

ms-dhoni

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலக கோப்பையை பெற்றுதந்தார். இவரது புகழை பறை சாற்றும் விதமாக தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இந்தி பட இயக்குனர் கபீர் கான் இயக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ’83’ என்று பெயர் சூட்டியுள்ளனராம். ஏனெனில் 1983 ஆம் ஆண்டு தான் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது. அந்த வருடத்தை வருடத்தை நினைவு கூறும் விதமாக படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளனராம். கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களையும், அவர்கள் சந்தித்த வெற்றி, தோல்விகளையும் , அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மூலமே, ரசிகர்கள் ஒரு சில கிரிக்கெட் வீரர்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டனர்.

-விளம்பரம்-

ranveer-singh

ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் வீரர்களான அசாருதீன், சச்சின் தோனி போன்றவர்களின் வாழ்கை வரலாறுகள் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதில் ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைக்காத போதிலும், கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் படமாக அமைந்தது. எனவே கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படம் கிரிக்கெட் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement