தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் – சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நம்ம ஷ்ஷ்ரூவ் கரண் – என்ன படம் தெரியுமா ?

0
524
karan
- Advertisement -

விஜய்க்காக எழுதிய கதையில் நடித்த கரணுக்கு தமிழ் நாடு அரசின் மாநில விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விருது பெறுபவர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் சினிமா நடிகர் நடிகைகள், தொலைக்காட்சிக்கு வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கு என்று தமிழ்நாடு சார்பில் விழுது வழங்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த விருது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரசும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த விருதுகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது.

- Advertisement -

இது ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.அதில் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை. தற்போது தமிழ்நாடு அரசு இந்த விழாவை நேற்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி இருக்கிறார்கள்.

2009ல் சிறந்த படத்துக்கான முதல் பரிசு – பசங்க, 2ம் பரிசு மாயாண்டி குடும்பத்தார், 3ம் பரிசு – அச்சமுண்டு அச்சமுண்டு, 2009ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது மலையன் படத்தில் நடித்த கரணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கரண். இவர் 1972 ஆம் ஆண்டிலேயே சினிமா உலகில் நுழைந்தார். இவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் கிரண் அவர்கள் முத்துராமன், கே ஆர் விஜயா நடித்த முருகன் அடிமை என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே நிறைய படங்களில் நடித்ததால் இவர் ஏராளமான குழந்தை நட்சத்திர விருதுகள் இருந்தார். அதுமட்டுமல்லாது தனது இளம் வயதிலேயே ‘நம்மவர்’ படத்தில் உலக நாயகன் கமலுக்கே வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் கரண்.

அதன் பின்னர் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்தாலும் இவரால் ஹீரோவாக நிலைத்து நிற்க முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவர் நடித்த கொக்கி, கருப்ப சாமி குத்தைகை தாரர் போன்ற படங்கள் இவருக்கு ஒரு திருப்புமுனையை தந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் 2009 ஆம் ஆண்டு நடித்த மலையன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்து இருக்கிறது.

Advertisement