கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டா சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் ஜுவனைல் என்பார்கள் கைது செய்யப்பட்டார்கள். இதில் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் ஜுவனைலின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. பின்னர் 2014 ஆண்டு இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகாளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இறுதியாக இன்று 4 குற்றவாளிகளும் இன்று தூக்கிலடபட்டனர். இதனால் நாடு முழுவதும் பலரும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : கொரோனாவை சாதகமாக்கி பணம் சம்பாதிக்கும் மனித மிருகங்கள். நடிகர் பாலா ஆவேசம்.
ஆனால், இது தாமதிக்கபட்ட நீதி என்றும் சிலர் குறை கூறி வருகின்றனர். அதே போல கற்பழிப்பு குற்றங்களுக்கு அதி விரைவில் தன்னடனை வாழுங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி இப்படி ஒரு சமயத்தில் கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற குற்றத்தை நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,
ஒருவழியாக 8 ஆண்டுகள் கழித்து நிலாவிற்கு நீதி கிடைத்து விட்டது ஆனால் பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று ஆச்சரியமாக இருக்கிறது ஏற்கனவே ஒரு வருடங்கள் ஆகிவிட்டது இதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மறக்கக்கூடாது என்று நம்புகிறேன் எப்போதும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து பல்வேறு பிரபலங்களும் எந்த ஒரு கருத்து தெரிவிக்காத போதிலும் தற்போது நிர்பயா வழக்கு தீர்ப்பு கிடைத்த இந்த நாளில் நடிகர் கார்த்தி தைரியமாக பொள்ளாச்சி சம்பவம் குறித்து மீண்டும் நினைவூட்டி உள்ளது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. கார்த்தி சொன்னது போல் பொள்ளாச்சி மிருகங்களுக்கு நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை போல எப்போது தண்டனை கிடைக்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.