பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுத கார்த்தி. உருக்கமான வீடியோ இதோ.

0
51534
karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்திக். மேலும்,நடிகர் கார்த்திக் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். அதோடு இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். மேலும், இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும்,நடிகர் கார்த்திக் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, சகுனி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் நடித்த எல்லா படங்களும் வேற லெவல் தான் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இதுவரை இவர் ஏற்கனவே நடித்து இயக்கிய இயக்குனர்கள் படத்தில் மீண்டும் நடத்தது இல்லை என்று தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த “கைதி” படம். மேலும்,இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. மேலும், இந்த படத்தில் பாடல்கள், காதல் காட்சிகள், ரொமான்டிக் இல்லாமல் வித்தியாசமான கதைக் களத்துடன் தயாரான படம் ஆகும். மேலும், இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து கைதி படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது என்ற தகவலும் வெளி வந்து உள்ளது.

இதையும் பாருங்க : பயமா இருக்கு, பேய் மாதிரி பாக்குறாங்க, 5 நிமிஷம் பேசு. சகோதரியிடன் அழுதுள்ள பிரியங்கா.

- Advertisement -

இந்நிலையில் ‘கார்த்தியின் மக்கள் மன்றம்’ நிர்வாகி நித்யா அவர்கள் நேற்று(நவம்பர் 29) விபத்தில் சிக்கிய உள்ளார். மேலும், அவரை போராடியும் காப்பாற்ற முடியாமல் போனதால் நித்யா உயிரிழந்து உள்ளார். மேலும்,இந்த தகவல் அறிந்த நடிகர் கார்த்தி அவர்கள் நேரில் சென்று அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் கார்த்திக் அவர்கள் தன் ரசிகைக்காக தேம்பித் தேம்பி அழுது உள்ளார். மேலும், அவர் அழும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு நடிகர் கார்த்தி அவர்கள் தனது அண்ணி ஜோதிகா உடன் இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும்,இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக போய்க் கொண்டு இருக்கின்றது. மேலும்,இந்த தம்பி படத்தை ஜீத்து ஜோசப் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சீதா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் சூரஜ் சதனா தயாரிப்பில் இந்த படம் வெளிவர உள்ளது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படி நடிகர் கார்த்திக் படத்தில் பிஸியாக இருந்து கொண்டு உள்ள போது தன்னுடைய ரசிகைக்கு நடந்த இந்த கோரச் சம்பவத்திற்காக அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வந்து உள்ளார். மேலும், இவரின் இந்த செயலைக் குறித்து ரசிகர்கள் இணையங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement