கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – அதுவும் காதல் திருமணமாம். இதோ விவரம்.

0
297
- Advertisement -

கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த அந்த வகையில் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக் ராய்.

-விளம்பரம்-

இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியலின் கதாநாயகி ஹர்த்திகா புது முகம்.

- Advertisement -

கார்த்திகை தீபம் சீரியல்:

ஹர்த்திகா கேரளாவை சேர்ந்தவர். கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் தான் இவர் பிறந்து வளர்ந்தார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரை உலகில் கால் பதித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை. திரையில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இவர் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது இவர் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் முதன்முதலாக திரைப்படங்களில்தான் நடிக்க தொடங்கினார். தமிழில் கதாநாயகியாகவும் இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இவர் நடித்த படங்களில் ஒன்று தான் பிளாக் அண்ட் வொயிட். இந்த படத்தில் ஹர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இதை அடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடிக்கிறார்கள்.

ஹர்த்திகா திருமணம்:

அதோடு இந்த சீரியலில் ஹர்த்திகா நடிப்பதற்கு திருமதி செல்வம் நடிகை அபிதா தான் இவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை ஹர்த்திகாவுக்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

திருமணம் குறித்த தகவல்:

அதாவது, வருகிற நவம்பர் மாதம் ஆறாம் தேதி தான் ஹர்த்திகாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இவர் காதலித்த நபரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் கேரளாவில் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஹர்த்திகா திருமணம் செய்யும் நபர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஹர்த்திகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement