கோட்ஸே குறித்த வசனத்தை நீக்கி சொன்னாங்க – பெரும் சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சுப்புராஜின் பேச்சி. இதான் அந்த வசனமாம்.

0
499
karthik
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். இருந்தாலும் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஜகமே தந்திரம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் மகான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர் விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

அதோடு இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளை அழகாக காண்பித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மகான் படம் பற்றிய தகவல்:

அதேபோல் வாணிபோஜனும் மகான் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாமே வெளியாகி இருந்தது. மகான் படத்தில் இவர் நடித்த ஒரு காட்சிகள் கூட இடம்பெறவில்லை. மேலும், படத்தில் வாணி போஜன் காட்சிகள் ஒன்று கூட இடம்பெறவில்லை என்றாலும் படத்தின் படம் ஆரம்பிக்கும் முன்பு நன்றி என்று வாணிபோஜன் பெயரை குறிப்பிட்டும், படம் பிறகும் படத்தில் நடித்தவர்கள் கதாபாத்திரங்களின் பட்டியலில் வாணிபோஜன் பெயர் மங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது தெரியவருகிறது.

-விளம்பரம்-

படத்தில் நீக்கப்பட்ட டயலாக்:

இதற்கு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல காட்சிகள் படமாக்க முடியவில்லை என்றும் குறிப்பாக கூட்டம் அதிகமாக உள்ள காட்சிகளை படமாக்க முடியவில்லை என்பதால் வாணிபோஜன் காட்சிகளை படத்திலிருந்து தூக்கப்பட்டுவிட்டதாக கார்த்திக் சுப்புராஜ் கூறி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு டயலாக் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, இந்த படத்தில் நாங்கள் ஒரு டயலாக் வைத்திருந்தோம். அது, உங்கள மாதிரி கொள்கை வெறிபிடித்தவன் தான் அந்த காந்தியை சுட்டுக் கொன்றான் என்ற டயலாக் இருந்தது.

படத்தில் டயலாக் நீக்க காரணம்:

இதை வைத்ததற்கு காந்திய பத்தி என்ன வேணாலும் பேசுங்க, கோட்ஸே பத்தி பேசாதீங்க, இதை பேசினால் இங்க பிரச்சினையாகும் என்று சொன்னார்கள். ஏன்னா, அந்த மாதிரி ஆட்கள் தான் நம் நாட்டில் இருக்கிறார்கள். அப்படித்தான் இந்த ஊர் இருக்கிறது. இந்த ஊரில் காந்திய பத்தி பேசினா எதையும் கண்டுக்க மாட்டாங்க. ஆனால், காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றுவிட்டார் என்று சொன்னதும் நிறைய பேருக்கு கோபம் வரும். அப்படித்தான் இருக்கிறது. அதனால் அந்த டயலாக்கை, உங்கள மாதிரி ஆட்களால் தான் காந்தியையும்,காந்தியத்தையும் அழித்து இருக்கீங்கான்னு சொல்லி இருக்கோம்.

எனக்கு பெயரை சொல்ல பயம் இல்லை:

கோட்சே பெயரை பயன்படுத்தாமல் மறைமுகமாக சொன்னோம். இது தான் நம்ம நாட்டோட நிலைமை. கோட்சா என்பவர் ஒரு தீவிரவாதி. அவர் நம்முடைய தேசத்தின் தந்தையை கொன்று இருக்கிறார். ஆனால், அவர் பேரை சொன்னால் பிரச்சனை ஆகிடும் என்று பயப்படுறாங்க. எனக்கு அவர் பேரு சொல்வதற்கு எந்த பயமும் இல்லை என்று கூறி இருக்கிறார். இப்படி கார்த்திக் சுப்புராஜ் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement