உண்மையான சூப்பர் ஸ்டார்னா என் அண்ணன் மட்டும் தான் – கேப்டன் நினைவேந்தலில் கருணாஸ் பேச்சு

0
445
Vijayakanth
- Advertisement -

விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை கருணாஸ் கிளப்பி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அதில் விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது.

- Advertisement -

கருணாஸ் பேசிய வீடியோ:

அப்போது நிகழ்வில் கலந்து கொண்ட கருணாஸ் அவர்கள் எப்போதுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கடந்த ஆண்டு முழுவதும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் பயங்கரமாக பேசப்பட்டு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இசை வெளியீட்டு விழா ஒன்றில் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை:

அதற்குப் பிறகு விஜய் ரசிகர்கள் எல்லோருமே விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டிருந்தார்கள். இதனை அடுத்து ஜெயிலர் படத்தின் பாடல்கல் எல்லாம் ரஜினிக்கு ஏற்றவாறும், விஜய்யை தாக்கி பேசப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. அதற்கு பின்பு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, காக்கா- கழுகு கதையை சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

விஜய்-ரஜினி ரசிகர்கள் சண்டை:

அதற்கு விஜய் தான் காக்கா என்று விமர்சித்து ரஜினி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள். இதனால் சோசியல் மீடியாவில் ரஜினி- விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் பனிப்போரே நடந்தது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை கூறியிருந்தார்கள். சிலர் ரஜினிக்கு ஆதரவாகவும், சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி இருந்தார்கள்.

விஜய் சொன்னது:

ஒரு வழியாக விஜய் தன்னுடைய லியோ படத்தின் வெற்றி விழாவின் போது என்றென்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று இந்த சர்ச்சையை முடித்து வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் கருணாஸ், சூப்பர் ஸ்டார் என்றால் விஜயகாந்த் தான் என்று பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement