விஜய் சேதுபதிகிட்ட இதனாலதான் இந்த கேள்விய கேட்குறாங்க. ட்ரெண்டாகும் கரு பழனியப்பன் பதில்.

0
169
- Advertisement -

விஜய் சேதுபதியின் இந்து திணிப்பு குறித்த சர்ச்சைக்கு கரு பழனியப்பன் கொடுத்திருக்கும் விளக்கவுரை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜய் சேதுபதியின் ஹிந்தி திணிப்பு குறித்த சர்ச்சை தான். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெர்ரி கிரஸ்மஸ். இந்தப் படத்தில் கத்ரீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்திருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம், 75 வருடம் நம்முடைய கலாச்சாரம், அரசியல் பின்னணி வந்து இந்திக்கு கலாச்சாரம், இன்றைக்கும் இந்தி தெரியாது, போடா என்ற டி-ஷர்ட் போட்டு தான் இந்தி எதிர்த்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

விஜய் சேதுபதி பேட்டி:

நீங்க வந்து என்று கேட்க ஆரம்பித்தார். உடனே குறிப்பிட்டு விஜய் சேதுபதி, எதுக்கு இந்த கேள்வி கேட்கிறீர்கள்? என்னை மாதிரி ஆட்களிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது? இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சார். நீங்க கேள்வியை தப்பாக கேட்கிறீர்கள். இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை படிக்காதே என்று யாரும் சொல்லவில்லை.

ஹிந்தி திணிப்பு குறித்து சொன்னது:

இங்கு படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி விஜய் சேதுபதி அவர்கள் இந்தியை திணிக்க கூடாது என்று பேசியிருந்தது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்நிகழ்வு தொடர்பாக சமீபத்தில் கரு பழனியப்பன் பேசிய உரையில், சுதந்திரப் போராசுதந்திர போராட்டாத்திற்கு பின் இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளே அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தன.

-விளம்பரம்-

கரு பழநியப்பன் உரை:

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளே ஆட்சியமைத்தன தமிழ்நாட்டில் மட்டும்தான் முதல்முறையாக 1967-ஆம் ஆண்டில் ஒரு மாநில கட்சி அரசமைத்தது. அண்ணாதுரை தலைமையில் திராவிட கட்சியை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்த்தது. அன்றைய சூழலில் தேசிய உணர்வே முக்கிய என்று பிற மாநிலங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மட்டும்தான் இந்தி மொழியை எதிர்த்தது. தங்களது மொழிக்காக போராடாத எல்லா மாநிலமும் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

ஹிந்தி குறித்து சொன்னது:

தமிழ்நாடு மட்டும்தான் முதலில் விழித்துக் கொண்டது. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள் என்று சொல்கிறது. தமிழ்நாட்டின் இந்த வரலாற்றை மாற்ற தொடர்ச்சியான பொய்கள் பரப்ப பட்டு வருகின்றன, சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் அதனால்தான் அப்படியான ஒரு கேள்விகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் யாரையும் இந்தி கற்க விடுவதில்லை என்கிற தவறான பிம்பங்கள் இங்கு பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இங்கு இந்தியை பலரும் கற்கிறார்கள் ஆனால் யாரும் இந்தியை படிக்கச்சொல்லி வற்புறுத்த முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement