சீமானுடன் கஸ்தூரி, வைரலான புகைப்படம் – காட்டத்துடன் கஸ்தூரி பதிவிட்ட பதிவு.

0
449
Seeman
- Advertisement -

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் அவர்களையும், மாடர்ன்ஸ் தியேட்டரையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஒரு காலத்தில் சென்னையை விட அதிக திரையரங்கம் கொண்டது சேலம் என்று கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் படங்கள் தயாரிப்பு சேலம் மாவட்டத்தை மையப்படுத்தி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என் பன்முகத்திறமை கொண்ட டி ஆர் சுந்தரம் என்பவர் கடந்த 1907 ஆம் ஆண்டு சேலத்தில் திருச்செங்கோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து இருந்தவர். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகனாக பிறந்தவர் தான் டி ஆர் சுந்தரம்.

-விளம்பரம்-

இவருக்கு சினிமாவின் மீது இவருக்கு ஆர்வம் போக வேலாயுதம் என்ற நண்பருடன் இணைந்து டி ஆர் சுந்தரம் ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை 1934ல் தொடங்கினார். பின்னர் இவரின் பல படங்களை தயாரித்தார். பின் இவர் தனியாக மாடர்ன் தியேட்டர் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி ஒரு தனியார் நிறுவனம் போல சினிமாவை தயாரிக்க ஆரம்பித்தார். சினிமாவிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் உருவாக்க 10 ஏக்கரில் இடத்தை வாங்கி அங்கேயே படத்தை தயாரிக்கும் வசதியுடன் கூடிய மார்டன் தியேட்டரை உருவாக்கினார்.

- Advertisement -

மாடர்ன் தியேட்டர் :

இந்த திரையரங்கில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் 120க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார்.பின் இந்த திரையரங்கை முதியோர் இல்லத்திற்கு கொடுத்து விட்டார்கள். அதற்கு பின் இந்த மாடர்ன் திரையரங்கம் நான்கு கைக்கு மாறி தற்போது விஜய் வர்மா என்பவரிடம் இருக்கிறது. தற்போது மாடர்ன் திரையரங்கின் நினைவாக எஞ்சி இருப்பது அந்த நுழைவு வாயில் என்று சொல்லப்படும் ஆர்ச் தான். தற்போது அந்த ஆர்ச்சை இடிப்பதாகவும், கருணாநிதி சிலை வைப்பதாகவும் கூறப்படுகிறது.

மாடர்ன் தியேட்டர் சர்ச்சை :

அதோடு இந்த இடத்தில் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செல்பி எல்லாம் எடுத்து இருந்தார். இதனால் இந்த இடத்தை அரசு எடுத்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இந்த மாடர்ன் திரையரங்கம் இருக்கும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தம் என்று கூறப்படுகிறது. மேலும், அந்த இடத்தின் தற்போதைய உரிமையாளர் விஜய் வர்மா இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்தி அரசியல் கலகமாக வைத்து விட்டார்கள். இதில் அரசு தலையிட்டதால் தான் தேவையில்லாத கெட்ட பேர். கலைஞர் சிலை வைக்க வேண்டும் எனில் முறையாக அணுகினாலே இது நடந்திருக்கும்.

-விளம்பரம்-

கஸ்தூரி பதிவு:

ஆனால், நெடுஞ்சாலை துறையின் இடம் என்று இப்போது திடீரென்று சொன்னால் நியாயமா? அதோட முதல்வர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்று தான் கூறுகிறார்கள். மேலும், இது தொடர்பாக பலருமே விமர்சனங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் திமுகவை விமர்சித்து பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், சுதந்திரத்திற்கு முன்னாடியே கட்டப்பட்ட நுழைவு வாயில். இத்தனை வருடம் கழித்து இன்று திமுக அரசின் கண்ணை உறுத்துகின்றது. மந்திரிக்குமாரி உள்ளிட்ட கலைஞரின் பல வெற்றிகளை தினம்தோறும் பறை சாற்றும் நினைவு வாயிலை விட என்று கூறி இருக்கிறார்.

திமுகவினர் கிண்டல்:

இதைப் பார்த்து திமுகவினர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமாவுடன் நடிகை கஸ்தூரி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் அடித்து வருகின்றார்கள். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கஸ்தூரி, இந்த புகைப்படத்தை தான் மூன்று நாட்களாக தூக்கிட்டு அலைகிறார்கள் D stock மடசாம்பிராணிஸ். இது 4 வருடம் முன்னாடி நானே share பண்ண ஒரு சாதா selfie. இதில் பதற்றதுக்கு என்ன இருக்கு? நான் என்ன ஆர்ச் முன்னாடியா நின்று செல்ஃபி எடுத்திருக்கிறேன்? இந்த புகைப்படமானது 2019 -ம் ஆண்டு சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக போட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement