நான் பார்ப்பதற்காக கால் கடுக்க காத்திருந்தார் விஜய்.! பிரபல இந்தி நடிகை பேட்டி.!

0
562
Vijay

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்தி சினிமாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அது போக விஜய் போக்கிரி படத்தின் இந்தி ரீ மேக்கில் ஒரு பாடலில் கூட தோன்றி இருந்தார்.

அதே போல பாலிவூட்டில் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். மேலும், நடிகர் விஜய் இந்தி நடிகை கத்ரீனா கைப்புடன் கோக் விளம்பரத்தில் கூட நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : வாக்களிக்க மனைவியுடன் Bmw பைக்கில் வந்த மாதவன்.! விலை எவ்வளவு தெரியுமா.! 

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள கத்ரீனா, விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி பேசுகையில், அந்த விளம்பரத்தின் போது படப்பிடிப்பு முடிந்து விட்டு கத்ரீனா கைப் கீழே அமர்ந்து போன்நோண்டி கொண்டிருந்தேன். அப்போது என் முன்னே யாரோ வந்து நின்றனர். ஆனால், அவர் யார் என்று பார்க்காமல் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சில நேரம் ஆகியும் அந்த நபர் அங்கேயே நின்று கொண்டிருந்தால் யார் என்று பார்த்தேன். அப்போது தான் அது விஜய் என தெரிந்தது. ஷுட் முடிந்ததால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் ஃபோனில் பிசியாக இருந்ததால் என்னை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தார்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement