படத்துக்காக உதவி கேட்ட கவினுக்கு, சிவகார்த்திகேயன் சொன்ன அதிரடி பதில் ?

0
9203

நடிகர் சிவாகார்த்திகேயன் சின்னத்திரையில் கடுமையாக உழைத்து தற்போது தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவருடைய ஸ்டார் வேல்யூ கிட்டத்தட்ட விஜய், அஜித்தை நெருங்குகிறது என கூட சொல்லலாம்.சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தங்களது சினிமா வாழ்க்கையை துவங்குபவர்கள் அனைவருக்கும் சிவாகார்த்திகேயன் தான் ரோல் மாடல். இவரின் பாணியை பலர் பின்பற்றி வருகின்றனர். சிவாவை போலவே மா.கா.பா ஆனந்தும் படங்களில் நடித்து வருகிறார்.

sivakarthikeyan

தற்போது இவர்களை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளனர் கவின். இவர் விஜய் டீவியில் சின்னத்திரையில் ஒரு சீரியலில் ‘வேட்டையின்’ கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர்.

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க ஒரு பெரிய பிரபலமான நடிகையை தேடி வருகின்றனர்.இதற்காக சிவாவை சந்தித்து, படத்திற்கு ஸ்டார் வேல்யூ வேண்டும் அண்ணா, அதனால் ஒரு பிரபலமான நடிகையை தேடி வருகிறோம் என கூறியுள்ளார் கவின். இதனை கேட்ட சிவா, ‘அட, நீங்களே ஒரு ஸ்டார் தான் ப்ரோ’ மாஸ் பண்ணுங்க’ என கூறி கவினை உற்சாகப்படுத்தியுள்ளார் சிவா.