வைரலான நீயா நானா ‘சூப்பர் அப்பா’ – கணவரை ஏளனமாக பேசிய மனைவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவிஞர் தாமரை. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
770
thamarai
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சியி “நீயா நானா”. நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிரான இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் வேலைக்கு அமர்த்திய குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருந்தது.

- Advertisement -

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள்

அந்த எபிசோடில் கோபிநாத்தின் பேச்சும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் பலரை நெகிழிச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் ‘நான் பள்ளியில் படிக்கும் போது  7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன்.

படிக்காத தந்தையின் ஏக்கம் :

ஆனால என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்’ என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார்.தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார்.

-விளம்பரம்-

படித்த மனைவியை திட்டி தீர்த்த நெட்டிசன்கள் :

மேலும், அந்த மகளிடம் உன் அப்பா இன்னும் தோற்கவில்லை என்று கூற அதற்கு அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை, அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தியது. இந்த எபிசொட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சூப்பர் அப்பா என்று பலரும் அந்த தந்தையை பாராட்டி வருகின்றனர். அதே போல தன் கணவரை ஏளனம் செய்த அந்த பெண்ணை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அந்த பெண்ணிற்கு ஆதரவாக கவிஞர் தாமரை குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் முகநூல் பக்கத்தில் முகநூல் வாசி இந்த நிகழ்ச்சி குறித்து போட்ட பதிவில் தாமரை கமன்ட் செய்துள்ளார்.

கவிஞர் தாமரை பதிவு :

அதில் ‘”அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் (சொந்த அனுபவம்). படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் – வீட்டிலுள்ள அனைவரிடமும் அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்து, இன்னும் பல செய்துகள்.

பேசத் தெரியாமல் பேசி :

கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும். உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும். இந்தப் பெண்களெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து ‘பிராக்ரஸ் ரிப்போர்ட்’டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்’

Advertisement