சிறிது நாட்களுக்கு முன் “கவிதை கோபால்” அவர்களின் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆனது. அதில் அவரை கும்பாரி படத்திற்க்கான ப்ரோமோசன் பிரஸ் மீட் ஒன்று நடந்துள்ளது. அதற்க்கு இவரையும் அழைத்து உள்ளனர். அந்த பிரஸ் மீட்டில் அங்கு வந்த பலரும் பேசிவிட்டு முடிவையும் கட்டத்தில் கவிதை கோபாலை பேச அங்குள்ள நபர் ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். அதன் படி அவரும் மைக் அருகே பேச வந்துள்ளார்.
Unfair…
— Siva~Vishnu (@Siva67725746) August 24, 2023
One day these Media's and Mic will wait for u…no worry..#Kavithaigopal https://t.co/OkUCFqqvEJ
அந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர்கள் சில பேர் அவரை பேச வேண்டாம் என்றும் அவரை அழைத்து செல்லலும் படியும் கூறியுள்ளனர். இருப்பினும் மேலே இருந்த நபர் அவரை பேச சொல்லி கட்டாயம் படுத்தியுள்ளனர். அவர் பேச தொடங்கும் கட்டத்தில் அங்குள்ள லைட் உட்பட அனைத்தையும் அணைத்துவிட்டு அங்கு இருந்து போக சொல்லி விட்டனர். அங்கு இருந்த அவருக்கு என்ன செய்வதென தெரியமால் திரு திருவென முழித்து இருந்தார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் தீயாய் பரவியது.
கவிதை கோபால்:
இவர் சில வருடங்களுக்கு முன் சாலையில் ஒரு யூடுபிர்ற்கு ஒரு கவிதை ஒன்றை சொல்லி பிரபலமானார். அந்த கவிதையானது இணையத்தில் பெரும் வைரல் ஆனது. அதன் பின் அவர் யூடுப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய கவிதையை “டாடா“ திரைப்படத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டனர்.
அது குறித்து நான் மெசேஜ் செய்தும் அவர்கள் ஏதும் பேசவில்லை என்று கூறினார். நான் மிகவும் வறுமையில் தான் இருந்து வருகிறேன். நான் சாப்பட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறேன் என்றும் அவர் கூறி இருந்தார். அந்த படத்தின் இயக்குனர் எனக்கு பழக்கம் ஆனவர் அவர் தான் என்னை அங்கு அழைத்தார். அதனால தான் நான் அங்கு சென்றேன்.
பட புரோமஷனில் நடைபெற்றது கூறித்து பேசியது:
எல்லாரும் அங்கு பேசி முடித்த பின் என்னையும் அழைத்தார்கள். வா வந்து பேசு அதற்க்கு தானே இங்க வந்து இருக்க வந்து பேசு என்றார். நான் மைக் அருகில் சென்று ஒரு கவிதை ஒன்றை கூறினேன். சிறிது நேரம் கழித்து பாட்டு பாடுகிறேன் என்று சொன்னேன். அதற்க்கு அந்த படத்தின் ஹீரோ நேரம் ஆகுது லைட் எல்லாம் அனைத்துவிட்டு கிளம்புங்கள் என்று சொன்னார். அந்த இடத்தில் எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தேன்.
மேலும் அவர் கூறுகையில் நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வந்து இருக்கின்றேன். எனக்கு 23 வயது ஆகிறது. எனக்கு சின்ன வயதில் இருந்து காவல் துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தேன். எனது அக்கா காவல் துறையிலும் எனது அண்ணன் வக்கீலாகவும் எனது தங்கை கலெக்டர்க்கு படித்து வருகிறார் என்றும் கூறினார். எனக்கு சின்ன வயதில் இருந்தே படிப்பு சரியாக வரவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை