நல்ல வாய்ப்பை தவறவிட்டது கேப்டன் இல்ல மக்கள் தான், விஜய் மட்டும் அரசியலுக்கு வரட்டும் – பிரேமலதாவின் லேட்டஸ்ட் பேட்டி.

0
1448
Premalatha
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.சில ஆண்டுகளாக உடல் நல குறைவின் காரணமாக அவஸ்தை பட்டு வருகிறார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்று பத்திரையாளர் சந்திப்பில் பேசிய விஜயபிரபாகரன்’ கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார்’ என்று கூறி இருந்தார்.

- Advertisement -

விஜய பிரபாகரன் பதிவு:

இதனால் பலருமே விஜயகாந்தின் உடல் நிலை பின்னடைவு என்ற தலைப்பில் பலர் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். இதனால் இது தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கேப்டனுடைய உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் தான் செய்திகளை கொண்டு வருகிறது. கட்சியினர், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். வழக்கம்போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என்று கூறி இருந்தார்.

பரிசுகளோடு வந்த தொண்டர்கள் :

இதனை தொடர்ந்து தான் சொன்னபடியே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். அவரைக் காண காத்துக் கொண்டிருந்த பல்வேறு தொண்டர்களும் ரசிகர்களும் அவரை கண்டதும் ‘கேப்டன்,கேப்டன்’ என்று உற்சாகமடைந்து கோஷமிட்டனர். ரசிகர்களை பார்த்து விஜயகாந்தும் தனது இரு கையை தூக்கி காட்டினார். மேலும், அங்கே இருந்தவர்கள் சிலர் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என்று கண்ணீர் கூட வடித்தனர்.

-விளம்பரம்-

பிரேமலதா பேட்டி :

இதனை தொடர்ந்து பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ‘தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நலமாக இருக்கிறார். விஜயகாந்த் நீண்டகாலம் இருப்பார். நமது முரசு, நாளைய தமிழக அரசு’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரேமலதா ‘அவர் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்னதும் எங்களிடம் பணம் இல்லை. எங்களுடைய சொத்தை வைத்து தான் கட்சியை ஆரம்பித்தோம் என்று அந்த சொத்து இருந்ததால் அது எத்தனையோ கோடி போய் இருக்கும்.

கேப்டன் இழந்த சொத்துக்கள் :

அவர் கட்சியைஆரம்பித்ததும் எங்கள் கல்யாண மண்டபத்தை பிடித்தார்கள் என்று அந்த மண்டபம் இருந்திருந்தால் 100 கோடி சென்றிருக்கும் ஆனால் இன்று வரை அதற்காக நானும் இல்லை அவரோ பயப்படவில்லை. இன்று கேப்டன் மட்டும் நல்லா இருந்திருந்தால் அவர் தானே Cm என்று சொல்லாத ஆட்களே இல்லை. ஆனால் அந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டது கேப்டன் இல்லை மக்கள் தான். அவர் படத்திலும் சரி நிஜத்திலும் சரி மக்களுக்கு செய்யாத உதவிகள் கிடையாது.

விஜய் மற்றும் வடிவேலு :

மேலும், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய பிரேமலதா ‘இந்தக் கேள்வியை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற கேள்வியை முதலில் விஜய்யிடம் கேளுங்கள் அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லட்டும் பின்னர் அதற்கான பதிலை நான் சொல்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும், வடிவேலுவை பற்றி பேசிய பிரேமலதா ‘இதுவரை கேப்டன் தன்னை திட்டியவர்களையோ தனக்கு துரோகம் செய்தவர்கள் பற்றியோ தவறாக பேசியதே கிடையாது.

வடிவேலு குறித்து வருந்திய வடிவேலு :

அவரை எத்தனை வீடியோக்கள் மீம்ஸ் போட்டு போட்டு கேலி செய்தார்கள். ஆனால், இது நாள் வரை அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது. அவ்வளவு தூரம் பேசிய வடிவேலுவை பற்றி கூட என்னிடம் ‘வடிவேலு ஏன் இப்போது நடிக்க மாட்டேங்கிறார். அவர் எல்லாம் பிறவிக் கலைஞன் அவர் நடிக்க வேண்டும் அவருக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று என்னிடமே கூறியிருந்தார். அவருக்குத் தெரிந்த பல தயாரிப்பாளர்களிடம் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியிருந்தார்

Advertisement