பைக் விபத்தால் ஏற்பட்ட காயம் – புகைப்படத்தை பதிவிட்ட நடிகை சைத்ரா. என்ன இப்படி அடிபட்டிருக்கு.

0
1684
chaitra
- Advertisement -

கயல் சீரியல் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய நடிகையின் இன்ஸ்டா பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. என்ன ஆச்சு என்று நலம் விசாரித்து வரும் ரசிகர்கள். மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் ஒவ்வொரு சேனலிலும் மக்களின் ஃபேவரிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவியில் புதிது புதிதாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் கயல்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர். கொடூரமான வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

இதையும் பாருங்க : எஸ் ஜே சூர்யாவிற்கு ‘தனுஷ்’கோடி என்று பெயர் வைக்க காரணம் ஏன் ? – வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்.

- Advertisement -

இவருடைய சொந்த ஊர் பெங்களூர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் இவர் சீரியலில் அதிக அழகுடனும், பொலிவுடனும் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த பிறகு தற்போது இவர் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த இவரை பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷட்டிங் ஸ்பாட்டில் பைக் ஒட்டிய போது கீழே விழுந்து காயமடைந்ததாக தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ள சைத்ரா தனக்கு ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement