தனுஷ் படத்தை தொடர்ந்து அஜித் பட காட்சியையும் விட்டு வைக்காத கயல் சீரியல் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
410
- Advertisement -

அஜித் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் காட்சியை அப்படியே காப்பி அடித்து இருக்கிறது கயல் சீரியல். பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. மேலும், சன் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும், சன் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது. தற்போது சன் டிவி சீரியலில் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர்.கயல் சீரியலின் மூலம் சைத்ரா ரெட்டிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அதேபோல் சஞ்சீவ் நடித்த சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் லேட்டஸ்ட் எபிசோட் ஒன்று கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த சில வாரமாக கயல் சீரியல் TRPயில் பின்தங்கி இருக்கிறது. இதனால் புது புது சீன்களை இயக்குனர் யோசித்து வைத்து வருகிறார். அந்த வகையில் அஜித் – திரிஷா நடித்த கிரீடம் படத்தின் காட்சியை அப்படியே காப்பி அடித்து வைத்து இருக்கிறார்கள்.

சீரியல்களில் சினிமாவில் வரும் BGM, மாஸ் காட்சிகள் போன்றவற்றை காப்பி அடித்து வைப்பது வழக்கமான ஒரு விஷயம் தான் என்றாலும் கயல் தொடரில் இது போன்ற காட்சிகள் அடிக்கடி வருவது ரசிகர்களை சலிப்படைய செய்கிறது. திருச்சிற்றம்பலம் படம் வந்த போது கூட அந்த படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்கு இந்த தொடரின் ஹீரோ ஹீரோயின் சஞ்சீவ் மற்றும் சைத்ரா நடனமாடி இருந்ததை ஒரு எபிசோடில் ஒளிபரப்பி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement