தனி மேக்கப் ஆர்டிஸ்ட், ஒரு நாளைக்கு 14,000 பில் – ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷிவாங்கி இப்படி நடந்துகொள்கிறாரா ?

0
182
shivangi
- Advertisement -

சிவாங்கி குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலைப்பேச்சு சேனல் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசன்களாக கோமாளியாக சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நல்லா இருந்த மூஞ்ச இப்படி கேவலமா ஆக்கி வச்சி இருக்கீங்களே – அதுல்யாவின் லேட்டஸ்ட் வீடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

சிவாங்கி திரைப்பயணம்:

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-
shivangi

வலைப்பேச்சு யூடியூப் சேனல் :

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சிவாங்கியின் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலைப்பேச்சு யூடியூப் சேனல் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூறியிருந்தது, சிவாங்கி பாடகர் என்பதை தாண்டி தற்போது நடிகையாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் டான் படத்திலும் நடித்திருந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்பு வருகிறது.

சிவாங்கி அட்ராசிட்டி:

இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய குணங்கள் சரியில்லாததால் அவருடைய சீனை எல்லாம் இயக்குனர் தூக்கிவிட்டு படத்தில் இருப்பார் ஆனால் முக்கியத்துவம் இல்லை என்பது போல காண்பிக்கிறார்களாம். அது மட்டும் இல்லாமல் புது இயக்குனர் ஒருவருடைய படத்தில் சிவாங்கி கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்திற்கான மேக்கப் ஆர்டிஸ்ட், டிரஸ் எல்லாம் இவங்களே எடுத்துக் கொண்டு போயிட்டு ஒரு நாளைக்கு 14,000 ரூபாய் பில் தருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்னொரு இயக்குனர் படத்தை பற்றி பேசிவிட்டு படத்தின் காஸ்டின் குறித்து எல்லாம் பேசணும் வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

சிவாங்கி செய்த செயல்:

ஆனால், சிவாங்கி நேரடியாக சூட்டிங்க்கு வந்திருக்கிறார். பின் அவரிடம் காஸ்டியூம் டிரஸ் எல்லாம் காண்பித்து நடிக்க சொன்னதுக்கு இவ்வளவு விலை குறைவான துணியெல்லாம் போட முடியாது. எனக்கு குறைந்த பட்சம் 5,000 ரூபாய் மதிப்புள்ள துணியாவது வேண்டும். என்னால் முடியாது என்று சொல்லி சென்றுவிட்டார். இதனால் அந்த ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டது. வளர்ந்த பிறகு பல நடிகர்கள் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், வளரும்போது இப்படி செய்வது மிகவும் தவறு. அவர் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது என்று கிண்டல் கேலி செய்து பேசி இருக்கிறார்கள்.

Advertisement