ரஜினி, தனுஷ் விருது வாங்கிய அதே மேடையில் தேசிய விருது வாங்கிய மதுரை சிறுவன் – யார் தெரியுதா ?

0
2293
rajini
- Advertisement -

டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு 67 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உட்பட பல பிரபலங்கள் விருது வாங்கினார்கள். அந்த வகையில் ரஜினி, தனுஷ் விருது வாங்கிய மேடையில் ஒரு சின்ன பையன் விருது வாங்கினார். அவர் யார் தெரியுமா? அந்த பையன் வேறு யாரும் இல்லை. கே.டி (எ) கருப்பு துரை என்ற படத்தில் நடித்த சின்ன பையன் நாக விஷால் தான். இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கே.டி (எ) கருப்பு துரை. இந்த படத்தை சரிகமா சார்பில் விக்ரம் மெஹரா, சித்தார்த் ஆனந்த்குமார் ஆகியோர் தயாரித்தார்கள்.

-விளம்பரம்-
குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

இந்த படத்தில் சிறுவனாக நடித்தவர் தான் நாகவிஷால். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் இந்த படத்திற்காக நாக விஷாலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் இவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். நாக விஷால் மதுரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : ஆல்யாவை தொடர்ந்து மைனா நந்தினியும் இரண்டாம் முறையாக கர்ப்பமா ? புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து.

- Advertisement -

இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், திரைப்படத்தில் எந்த ஒரு அனுபவம் இல்லாமல் யதார்த்தமாக நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்த. மேலும், இவர் விருது வாங்கியதை அடுத்து பலரும் பாராட்டினார்கள். அப்போது பேட்டியில் நாகவிஷால் விஷால் கூறியது, இந்த படம் ரிலீஸானபோது கொஞ்சம் பேர்தான் பார்த்து பாராட்டினார்கள்.

KD | 42 Best Feel Good Tamil Movies Post 2000!

ஆனால், இப்போது விருது வாங்கின பிறகு என்னை நிறைய பேர் பாராட்டுகிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. ரஜினி, தனுஷ் எல்லோரையும் நான் அங்கு தான் பார்த்தேன். அவர்கள் விருது வாங்கிய மேடையில் நானும் விருது வாங்கியதை நினைத்தாலும் இப்பவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் படித்துக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படத்திலும் நடிப்பேன். இன்னும் சிறப்பாக நடித்து மதுரைக்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement