அத வீட்டுக்கு வந்து பாத்தீங்க நீங்க – பயில்வான் ரங்கனுக்கு கீர்த்தி பாண்டியன் கொடுத்த பதிலடி.

0
700
- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வியால் கடுப்பாகி கீர்த்தி பாண்டியன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
Kannagi

இதனை அடுத்து இவர் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் திருநெல்வேலியில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது.

- Advertisement -

கீர்த்தி பாண்டியன் திருமணம்:

இவர்களுடைய வரவேற்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இவருடைய திருமணத்திற்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது கீர்த்தி பாண்டியன் நடித்த படம் கண்ணகி. அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கண்ணகி படம் உருவாகி இருக்கிறது. ஷான் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பெண்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் இயக்கி இருக்கிறார்.

கண்ணகி படம்:

இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி தான் வெளியாக இருக்கிறது. அதோடு அன்றே கீர்த்தி பாண்டியனுடைய கணவர் அசோக் செல்வன் நடித்த சபாநாயகன் படமும் வெளியாக இருக்கிறது. இரண்டு பேருடைய படமே ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

பயில்வான் கேட்ட கேள்வி:

இந்த நிலையில் கண்ணகி திரைப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்கள். அதில் பத்திரிக்கையாளரான பயில்வான் வழக்கம்போல் குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்டிருக்கிறார். அதாவது, வீட்டுக்குள் தான் கணவன் மனைவி சண்டைனா, இந்த வாரம் தியேட்டரில் ரெண்டு பேரோட படமும் மோதுதே என்று பயில்வான் கேட்டிருக்கிறார். இதை கேட்டு கோபமான கீர்த்தி பாண்டியன், நாங்கள் சண்டை போட்டோம் என்று எங்க வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா? என்று கேட்டார்.

கீர்த்தி பாண்டியன் கொடுத்த பதிலடி:

அதற்கு பயில்வான், போட்டின்னு வச்சுக்கோங்க என்று மழுப்பி பேசி இருக்கிறார். உடனே கீர்த்தி பாண்டியன், எங்களுக்கு இடையே போட்டியும் இல்லை, சண்டையும் இல்லை என்று கூறியிருக்கிறார். பின் பயில்வான், சண்டை வந்தால் தான் கணவன் மனைவி இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். அதுக்கு கீர்த்தி பாண்டியன், அதை நான் வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவருடைய வாயை அடைக்கும் வகையில் பதில் அளித்து இருக்கிறார். இப்படி இருவருக்கும் இடையே நடந்த கார சாரமான விவாதம் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement