இந்த சீசனோடு பிக் பாஸுக்கு பாய் சொல்லும் கமல். பிக் பாஸ் குழு குறி வைக்கும் அந்த 5 பிரபலங்கள். யார் வந்தா நல்லா இருக்கும்.

0
521
- Advertisement -

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் ஐந்து பிரபலங்களின் பட்டியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை எடுத்து இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் தெரிவித்தாலும் பின் இது மக்களின் பேவரட் நிகழ்ச்சியாக மாறியது.

-விளம்பரம்-

மேலும், தமிழில் ஆறு சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். கடந்த அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீட்டுடன் நிகழ்ச்சியை பரபரப்பாக, சண்டை கலவரங்களுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த சில வாரமாகவே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டிருக்கின்றது. அதோடு கடந்த வாரம் மிக்ஸாம் புயல் காரணமாக மக்களால் அதிகமாக வாக்களிக்க முடியாது என்பதால் இல்லை என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஆனால், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சீசன்களை விட இந்த சீசனில் கமலஹாசன் போட்டியாளர்களிடம் பாரபட்சம் இல்லாமல், மக்கள் மனசாட்சியாக பேசாமல் தன்னுடைய சுயநலத்திற்காக பேசுகிறார் என்றே பல விமர்சனங்கள் இருந்து வருகிறது.

கமல் குறித்த சர்ச்சை:

குறிப்பாக, பிரதிப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் தான் பூகம்பமாக வெடித்திருந்தது. இதற்கு கமலை தாக்கி பேசி இருந்தார்கள். கமலும் இது தொடர்பாக பல விளக்கம் கொடுத்திருந்தாலும் நெட்டிசன்கள் விடவில்லை. அதேபோல் கடந்த வாரம் மாயா நிக்சனுக்கு ஆதரவாக பேசி அர்ச்சனாவை திட்டியிருந்தார். இப்படி தொடர்ந்து கமலஹாசன் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். இதனால் நீங்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டாமல் ஒருதலைபட்சமாக கூறுகிறீர்கள். நீங்கள் அரசியலுக்கு வந்தால் எப்படி குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தருவீர்கள்? என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியை விட்டுவெளியேறும் கமல்:

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியோடு கமல் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனேகமாக இதுதான் கமலுடைய கடைசி சீசன் என்று நம்பகத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அடுத்த தொகுப்பாளரை தேடும் வேட்டையில் விஜய் டிவி இறங்கிவிட்டது. தற்போது வரை 5 பிரபலங்களிடம் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து பேசப்பட்டிருக்கிறது.

ஐந்து பிரபலங்கள் பட்டியல்:

அதில், பிக் பாஸ் ஓ டிடி யில் வெளியாகியிருந்தபோது கமலுக்கு பதில் தொகுப்பாளராக இருந்தவர் சிம்பு. அவர் சிறப்பாக கொடுத்திருந்தார். கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான ஆக்சன் கிங் அர்ஜுன்
நடிகர் சரத்குமார் மாதவன் ஆகியோரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதில் யார் அடுத்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்பதை உங்களுடைய கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Advertisement