அன்பே வா சீரியல் உட்பட மூன்று சீரியலை முடிக்கும் சன் டிவி – இதுதான் காரணம்

0
566
- Advertisement -

சன் டிவியில் ஒரே நேரத்தில் பிரபலமான மூன்று சீரியல்கள் முடிவடைய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

காலையில் முதல் இரவு வரை சன் டிவியில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்படுகிறது. இதனாலே டிஆர்பி யில் சன் டிவி தான் என்றுமே ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றது. இதற்கு போட்டியாக சமீப காலமாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்கள் வந்தாலும் சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி யில் முன்னிலை பிடிப்பதை தவறுவதில்லை. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

- Advertisement -

இப்படி இருக்கும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஹிட்டான மூன்று சீரியல்கள் ஒரே நேரத்தில் முடிய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது, மிஸ்டர் மனைவி, செவ்வந்தி, அன்பே வா ஆகிய மூன்று சீரியல் தான் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

மிஸ்டர் மனைவி:

இந்த தொடர் சமீபத்தில் தான் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் ஹீரோவாக பாவன் ரவிச்சந்திரன், கதாநாயகியாக ஷபானா நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது சீரியலில் ஷபானாவுக்கும் பாவனுக்கும் திருமணம் செய்து கொண்டதுக்கு பிறகு வரும் பிரச்சனைகள் தான் காண்பிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அன்பே வா சீரியல்:

இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இடையில் இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் காரணமின்றி வெளியேறி இருந்தார்கள். இருந்தாலும், சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பூமிகா மற்றும் வருனின் காதல் கதையை மையாக கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் இருவரும் எதிரிகளாக இருந்தார்கள். பின் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சீரியல் முடிவடைய காரணம்:

தற்போது இந்த சீரியல்கள் தான் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே முடிவடைய இருக்கிறது. இதனால் இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் சில வாரங்களாகவே இந்த சீரியல் உடைய டிஆர்பி ரேட்டிங் குறைந்திருப்பது கூறப்படுகிறது. அதேபோல் புதிதாக மூன்று சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சன் டிவி சேனல் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல் புதிய சீரியல் ப்ரோமோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement