மிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்தை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவியது.
இதையும் பாருங்க : மோடிக்கு எதிராக ஒரே ட்வீட், பணத்தை வாரி இறைத்து ஓவியாவை பிரச்சாரத்திற்கு இறக்கிய பிரபல கட்சி. எத்தனை கோடி தெரியுமா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.மேலும், இவரது அப்பா சுரேஷ் குமார் மலையாளத்தில் பிரபல இயக்குனர் தான். இப்படி ஒரு நிலையில் கீர்த்தி சுரேஷ் – அனிருத் இருவரும் காதலிப்பதாக வெளியான செய்தி குறித்து கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3-வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாஜக தொழிலதிபரை மணக்கிறார் என்ற வதந்தி சமூக வலைதளத்தில் வைரலானது.
இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.அதில், கீர்த்தி சுரேஷ் அப்பா பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக உள்ளார். தற்போது இவர் பாஜக தரப்பில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் முடித்துவைக்க முடிவு செய்துவிட்டார். இதற்கு கீர்த்தி சுரேஷும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரை மணந்து கொள்வார் என்பது உறுதியாகிவிட்டது என்று கூறிஇருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து விளக்கமளிகையில், இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை. யார் தான் இதையெல்லாம் பரப்புகிறார்கள். தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.