பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ‘800’ படம் எப்படி ? – இதோ விமர்சனம்

0
2060
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனை புரிந்த இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி இருக்கும் படம் தான் 800. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீபதி இயக்கி இருக்கிறார். மாதுர் மிட்டல் இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 800 திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கொழும்பில் உள்ள வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் முத்தையா முரளிதரன் சந்தித்த சவால்களை எதிர்கொண்டதத்தை பற்றி சொல்வது போல் படம் தொடங்குகிறது. இலங்கை மலையக தமிழராக முத்தையாவின் மகன் முரளிதரன் இருக்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம். இவர் தமிழர் என்ற ஒரே காரணத்தினால் கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படுகிறார்.

- Advertisement -

இருந்தாலும் இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன் ரனதுங்க இவருடைய திறமையை அறிந்து கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வைக்கிறார். அதற்குப்பின் கிரிக்கெட் விளையாட்டில் முரளிதரன் சந்தித்த சவால்களையும் பிரச்சனைகளையும் சுவாரசியமாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார். மேலும், லண்டனில் இலங்கை அணி தோற்று முரளிதரன் அவமானப்பட்டதை தொடங்கி பௌலிங் போடும்போது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு முரணானது என்று ஆஸ்திரேலியாவில் பிரச்சனை செய்வது என அனைத்து காட்சிகளையும் எமோஷனலாக இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

அதோடு இலங்கையில் போர் நடந்த வடக்கு பகுதியில் போராளிகளுடன் முத்தையா முரளிதரன் பேசும் காட்சி சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தில் அதிகமான காட்சிகள் கிரிக்கெட் மைதானத்தில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், ஒரு லைவ் கிரிக்கெட் விளையாட்டை பார்த்தது போலவே இருக்கிறது. மேலும், படத்தில் விளையாட்டோடு சேர்த்து 1980 முதல் 2009 வரையிலான இலங்கையில் நடந்த ஈழ அரசியலையும் ஓரளவு இயக்குனர் காண்பித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இனவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு பகுதி தமிழர்கள், முத்தையா முரளிதரன் இருந்த மலையக தமிழர்கள், கொழும்பு தமிழர்கள் என மூன்று பகுதி மக்களையும் அவர்களுக்குள் இருக்கும் முரண்களையும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால், சில சர்ச்சையின் காரணமாக மாதுர் மிட்டல் முத்தையா ரோலில் நடித்திருக்கிறார்.

இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அனைத்து எமோஷனல்களையும் காண்பித்திருக்கிறார். குறிப்பாக முத்தையா முரளிதரன் எடுத்த 800 விக்கெட்டுகளுக்கு பின் உள்ள வலி, கண்ணீர் வேதனை என அனைத்தையும் இந்த படம் சொல்லி இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவும். பின்னணி இசையும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 800 படம் பூர்த்தி செய்து இருக்கிறது.

நிறை:

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

மாதுர் மிட்டல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்

இந்த படத்தில் இலங்கையில் நடந்த அரசியலை காண்பித்து இருக்கிறார்கள்

இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையும் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்

படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு குறைகளும் இல்லை

மொத்தத்தில் 800- டார்கெட் ஓகே

Advertisement