விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண தேதி குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.
இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.
ரகசிய திருமணம் முடிந்ததா ?
இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகை நயன்தாரா. அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது தான் தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே ரகசிய திருமணத்தை முடித்துவிட்டதாக ஒரு புதிய கிசுகிசு கிளம்பி இருந்தது.
நயன் – விக்கி திருமணம் :
ஆனால், அதுவும் வதந்தி என்று தான் பின்னர் தெரிந்தது. இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் – நயன் திருமணம் குறித்த செய்தி ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து படத்தை இயக்க இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் கேட்ட கேள்வி :
அந்த படம் முடிந்த உடனே விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே போல தனக்கு திருமணம் நடந்தால் அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் செய்வேன் என்று நயன் ஏற்கனவே கூறி இருந்தார் என்பதும் கூறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார் அப்போது அந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும் கலந்துகொண்டார்.
அப்போ இந்த தேதியில் தான் திருமணமா :
அப்போது நயன்தாராவிடம் உங்களுக்கு ஜூன் 9ம் தேதி திருமணம், சரிதானே..? என்று வெகுளித்தனமாக கேட்டாராம். அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மூலமாக இப்போது அந்த தகவல் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இரண்டாவது முறை திருப்பதிக்கு சென்று வந்ததையும், கீர்த்தி சுரேஷ் தேதி குறிப்பிட்டு இப்படி கேட்டதையும் பார்க்கும்போது கிட்டத்தட்ட ஜூன் மாதம் 9ம் தேதி இவர்கள் திருமணம் நடப்பது உறுதி என்பதே போலவே தோன்றுகிறது.