மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த வானத்தை போல சீரியல் பிரபலம் – இல்லத்தரசிகள் குஷி.

0
1466
Swetha
- Advertisement -

வானத்தைப்போல சீரியல் நடிகை துளசி மீண்டும் நடிக்க வந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இவர் நடிக்கும் சீரியல் குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் வானத்தைப் போல. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார் . முதலில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து வந்தார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

ஸ்வேதா கால்கே பற்றிய தகவல்:

ஸ்வேதா கால்கே கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்து இருக்கிறார். மேலும், ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் முதலில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். பின் சீரியல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக கலர்ஸ் கனடா சேனல் தொடரில் நடித்து இருந்தார். அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் தெலுங்கு படத்திலும் ஸ்வேதா நடித்து இருந்தார்.

வானத்தைப்போல சீரியலில் துளசி:

இதனை தொடர்ந்து இவர் குறும்படங்கள், ஆல்பம் சாங் எனப் பலவற்றிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் சோசியல் மீடியாவில் உருவாகி இருக்கிறார்கள். மேலும், இவர் சீரியல் இருந்து விலகியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய நடிகர்கள்:

மேலும், சீரியலில் இருந்து ஸ்வேதா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக கன்னட சீரியல் நடிகை மான்யா என்பவர் நடித்து வருகிறார். ஸ்வேதாவை விலகியதை தொடர்ந்து இந்த தொடரில் சின்னராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். இதற்கு பதிலாக தற்போது சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவரும் பல வருடமாக சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் துளசி ஸ்வேதா ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுஎன்னவென்றால்,

ஸ்வேதா கால்கே நடிக்கும் புது சீரியல்:

தற்போது இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கேஜிஎப் பட நடிகை மாளவிகா அவினாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் ஜூன் மாதம் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. துளசி ஸ்வேதா நடிக்கும் இந்த புது சீரியல் புரோமோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளார்கள்.

Advertisement