நடிகர் ரவி மோகன் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. கோர்ட்டில் ரவிமோகன்- ஆர்த்தி உடைய விவாகரத்து கேஸ் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷா உடன் சேர்ந்து ஆன்மீகம், நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் பலருமே கெனிசாவின் நடத்தையை ரொம்ப மோசமாகவும் விமர்சித்தும் பேசுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் கெனிஷாவை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக கெனிஷா வெளியிட்ட வீடியோவில், என்னைப் பற்றி ரொம்ப மோசமாக சோசியல் மீடியாவில் சொல்கிறார்கள். நான் அமைதியாக இருக்கிறேன் என்றெல்லாம் கேட்கிறார்கள். இதுதான் என்னுடைய கடைசி விளக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் என்னுடைய பெற்றோருக்கு ஒரே மகள். அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. அவர்கள் இறந்து விட்டார்கள். எனக்கு 18 வயதில் திருமணம் நடந்து விட்டது. ஆனால், அது வெறும் நான்கு மாதங்கள் தான் நீடித்தது. என்னுடைய கணவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பிருந்தது. அந்த உறவு ரொம்பவே நரகமாக இருந்தது. அதனால் நான் மனரீதியாக உடல் ரீதியாகவும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருந்தேன்.
ரவி-கெனிஷா சர்ச்சை:
அப்போது நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். என்னுடைய கரு கலைந்து விட்டது. அந்த நேரத்தில் எனக்கு 19 இருந்து 20 வயது தான் இருக்கும். நான் ரொம்பவே உடைந்து விட்டேன். அதற்கு பிறகு என்னுடைய அம்மா இறந்தார். அதை அடுத்து நான்கு வருடத்திலேயே என்னுடைய அப்பா இறந்து விட்டார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் நான் தனியாகத்தான் வாழ்ந்தேன். என்னுடைய கடந்த காலத்தையும் நோண்டி எடுத்து கிண்டல் எல்லாம் செய்கிறார்கள். ஒரு இரவுக்கு 500 ரூபாய் வாங்கிக் கொண்டு பாரில்தான் பாடினேன். அப்படித்தான் தொடங்கினேன். இதைவிட அதிகமாக இப்போது சம்பாதிக்கிறேன். எல்லோரும் என்னை குறி வைத்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி ரொம்பவே மோசமாக பேசுகிறார்கள். குடும்பத்தை கெடுத்தவள் என்றெல்லாம் என்னை சொல்கிறார்கள். கர்பத்திலே என்னுடைய குழந்தையை இழந்தவள்.

கெனிஷா வீடியோ:
இன்னொருவருடைய குடும்பத்திலிருந்தோ, குழந்தைகளிடமிருந்தோ பிரிப்பவள் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ரவி மோகன் மனதளவில் ரொம்பவே உடைந்து போயிருந்தார். அவர் என்னிடம் வந்து உதவி கேட்டார். ஒரு தெரபிஸ்ட் ஆக அவருக்கு நான் எல்லா உதவிகளையும் செய்தேன். அவர் குடும்பத்துடன் இருந்த பிரச்சனை எல்லாம் சரி செய்ய சொல்லி நான் சொன்னேன். ஆனால், அதற்கு முன்பே ரவி மோகன் மனதளவில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விலகி இருந்தார். அந்த சமயத்தில் தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம். இன்றும் அப்படித்தான் இருக்கிறோம். மற்றபடி நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. எனக்கும் அந்த தேவையும் இல்லை. மக்கள்தான் எங்களுடைய உறவை தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=ZsqQ-XwLTo8
விமர்சனங்களுக்கு பதிலடி:
இந்த உலகத்தில் நல்லவர்களை விட பொய், சூழ்ச்சி செய்பவர்கள், ஏமாற்றுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அவரை இப்போது இந்த உலகத்தில் விட்டு விடுகிறேன். இனி எந்த விளக்கமும் பாதுகாப்பும் போராட்டமும் இருக்கவே இருக்காது. உண்மையான அன்பு விசுவாசம் ஆகியவற்றை உலகம் மதிக்கவில்லை. நான் சென்னையை விட்டு கிளம்புகிறேன். இசை, தெரபி சிகிச்சை நான் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தையும் விட்டுப் போகிறேன். சோசியல் மீடியா தொல்லை, மன அழுத்தம் போன்ற காரணங்கள் தான் சோசியல் மீடியாவில் இருந்து விலகுகிறேன். இதுக்கு மேல என்னை நல்லவளாக நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன் என்று எமோஷனாக பேசியிருக்கிறார்.






