21 வயது நடிகை பாத்ரூமில் மர்மமாக மரணம், படுக்கை அறையில் சிக்கிய போதை பொருட்கள் – கணவர் கைது

0
116
Sahana
- Advertisement -

மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகையின் படுக்கை அறையில் சிக்கியிருக்கும் ஆதாரங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள நடிகை சகானா மர்மமான முறையில் இறந்து இருக்கிற தகவல் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 20 வயது தான் ஆகிறது. இவர் மாடல் அழகி ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. மேலும், இவர் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் மாடலும் செய்து வந்து இருக்கிறார். இதனிடையே இவர் சஜாத் என்பவரை காதலித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். முதலில் இவர்களின் திருமணத்தை சஹானாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் சஹானா தன்னுடைய பெற்றோர்களை சம்மதிக்க வைத்ததால் அவர்களும் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்பின் சஹானா பெற்றோர்கள் சஹானாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தனர். மேலும், நடிகை சஹானா நடிக்க வந்த பின்பு கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அங்கு தன் கணவர் உடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சகானா தான் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

சகானா இறப்பு:

பின் சஹானாவின் வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டு இருந்தது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சஹானாவின் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது சகானா அவரது கணவரின் மாடியில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தார்கள். மேலும், சஹானாவின் உறவினர்களும் தகவலறிந்து சம்பவ வீட்டிற்கு வந்திருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சகானாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

போலீஸ் விசாரணை:

மேலும், தங்கள் பெண் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் தான் சகானாவை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீஸிடம் சஹானாவின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதன் அடிப்படையில் சஹானாவின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சஹானாவின் இறப்பில் மர்மம் இருப்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சஹானாவின் படுக்கை அறையில் போலீசார் சோதனை செய்திருந்தார்கள். அங்கு கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைபற்றிய போலீசார் இது தொடர்பாக சகானா கணவர் சஜாத் இடம் விசாரணை நடத்தி வந்தார்கள்.

-விளம்பரம்-

கைதான சகானா கணவர்:

அதுமட்டும் இல்லாமல் சஹானாவும் அவரது கணவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்களை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே சொல்லி இருந்தார் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறி உள்ளனர். மேலும், பிரேத பரிசோதனையில் சஹானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதன் தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் போலீசிடம் அளித்துள்ளனர். அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பின் முதற்கட்டமாக சஹானாவின் கணவரை போலீஸ் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் காவலில் எடுத்து சஹானாவின் கணவரை விசாரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.

சகானா அம்மா அளித்து இருக்கும் பேட்டி:

சஹானாவின் கணவர் சஜாத்தை விசாரிக்கும்போது சஹானாவின் சாவு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாடலும், நடிகையுமான சஹானாவின் இறப்பு கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது தொடர்பாக சஹானாவின் தாயார் கூறியிருப்பது, என் மகள் எப்போதும் தன் கணவர் செய்த கொடுமைகளை பற்றி பேசுவார். நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்து இருந்தார். ஆனால், அதற்குள் என் மகள் பிணமாகி விட்டாள். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட கொலை என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

Advertisement