விஜய், பிரபாஸை புகழ்ந்து தள்ளிய அமைச்சர்..! ஏன் தெரியுமா..? இதுதான் காரணமா.!

0
1206
Vijay-Prabhas
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா வரலாறு காணாத இயற்கை சீற்றத்தைச் சந்தித்திருந்தது. சமீபத்தில் அங்கு மழை படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்பியிருந்தது. கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நடிகர்களும் உதவி செய்ததற்கு கேரள அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

vijay

- Advertisement -

கன மழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் உதவி செய்ய முன் வந்துள்ளன.தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். தமிழ்த் திரையுலகினர் பலரும் கேரளாவுக்கு நிவாரணத் தொகை வழங்கி இருந்தனர்.

சமீபத்தில் கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியளித்த நடிகர் நடிகர்களுக்கு கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன், கேரள சினிமாவில் கோடிகளில் சம்பளம் பெறும் மலையாள நடிகர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே வெள்ள நிவாரண நிதி அளித்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் நடிகர்களுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

prabhas

மலையாள சினிமாவிற்கு சம்மந்தமே இல்லாத தெலுங்கு நடிகர் பிரபாஸ் 1 கோடி ருபாய் அளித்திருந்தார். அதே போல தமிழ் நடிகர்களான விஜய், லாரன்ஸ், சூர்யா போன்ற பல நடிகர்கள் கேரள மக்களுக்கு நிதியுதவி அளித்திருந்தனர். ஆனால், அண்டை மாநில நடிகர்கள் வழங்கிய நிதி அளவிற்கு கூட கேரள நடிகர்கள் சிலர் நிதி அளிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement