‘நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்’ ஒரே வசனம் மூலம் பிரபலமான KGF தாத்தா மரணம்.

0
299
kgf
- Advertisement -

கே.ஜி.எப் பட நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் இன்று காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் ரவி கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவக்குகிறார் யாஷ்.

- Advertisement -

இதையும் பாருங்க : Kurupeesam பற்றி வாய் கிழிய பேசிய ஜனனி – அமுதவனனுடன் சேர்ந்து நாமினேஷன் பற்றி Code Wordல் பேசியதை பாருங்க.

கே ஜி எஃப் 2 கதை:

ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? இறுதியில் துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த விமர்சனம்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்தது என்று சொல்லலாம். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து என ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது.

கேஜிஎப் பட நடிகர் கிருஷ்ணா:

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்நிலையில் கேஜிஎப் படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தில் முதியவர் ஒருவர் கண் பார்வை தெரியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருடைய பெயர் தான் கிருஷ்ணா ஜி ராவ். இவரே இரண்டாம் பாகத்தில், உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். நீங்கள் மட்டும் அவன் குறுக்கே போய்டாதீங்க சார் என்று படத்தின் ஆரம்பத்தில் சொல்லுவார்.

கிருஷ்ணா ஜி ராவ் மரணம்:

படத்தில் ஒரு டயலாக் சொன்னாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த நிலையில் இவர் சமீப காலமாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் சில நாட்களாகவே இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சிகிச்சை அளித்தும் இன்று கிருஷ்ணா ஜி ராவ் இறந்திருக்கிறார். இவர் இறந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement