யாஷின் மெய்க்காப்பாளர் To வில்லன் – Kgf பட நடிகரின் மனைவி மற்றும் அழகிய மகளின் புகைப்படம்.

0
1103
ramachandar
- Advertisement -

கேஜிஎப் வில்லன் கருடனின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான படங்களில் ஒன்று கேஜிஎப். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகி இருந்தது. அதோடு கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

-விளம்பரம்-

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். முதல் பாகத்தை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் கருடன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் நடிகராக அறிமுகமானவர் ராமச்சந்திரா ராஜூ.

- Advertisement -

இவர் யாஷின் personal Bodygaurdஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Kgf படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவரை ரசிகர்கள் பலரும் கருடா என்று தான் அழைத்தார்கள். இதனை அடுத்து இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருந்த சுல்தான் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்திருந்த கோடியில் ஒருவன் படத்திலும் நடித்திருந்தார் ராமச்சந்திரா ராஜூ.

யானை படம்:

மேலும், கடந்த ஆண்டு அருண் விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த யானை படத்தில் ராமச்சந்திரா ராஜூ
நடித்திருந்தார். அதுவும் இந்த படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

ராமச்சந்திரா ராஜூ நடிக்கும் படங்கள்:

ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த யானை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது இவர் ஜன கன மன என்ற படத்தில் தமிழ் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ராமச்சந்திரா ராஜூன் குடும்பத்து புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ராமச்சந்திரா ராஜூ குடும்ப புகைப்படம்:

அதாவது, நடிகர் ராமச்சந்திர ராஜு அவர்கள் சமீபத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அவருடைய மனைவி மற்றும் மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே, கொடூர வில்லன் கருடனுக்கு இப்படி ஒரு அழகான குடும்பமா! என்று புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement