இதனால் தான் தமிழ்நாட்ல எல்லாருக்கும் உங்கள புடிச்சி இருக்கு – யாஷ்ஷின் செயலை கண்டு நெகிழ்ந்து போன விஜய் டிவி சீரியல் நடிகை.

0
312
yash
- Advertisement -

ரசிகர்களுக்காக யாஷ் செய்திருந்த செயல் குறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். யாஷ் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்கத் துவங்கி இருந்தார். இவர் முதலில் நடித்த சீரியல் நந்தகோகுலா. பிறகு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தது கே ஜி எஃப் படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும், முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கே ஜி எஃப் 2 சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : டிமான்டி காலணி இரண்டாம் பாகம்,இயக்குனரே அறிவித்த அறிவிப்பு – யார் யார் இருக்காங்கன்னு பாருங்க.

- Advertisement -

கேஜிஎப் 2 படம் :

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருந்தார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் .

கேஜிஎப் 2 படத்தின் கதை:

ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் காப்பாற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. யாஷ் மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார்.

-விளம்பரம்-

யாஷின் வீடியோ:

அதோடு இந்திய அளவில் ஒரே படத்தின் மூலம் பேன் இந்தியா ஸ்டாராக யாஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்நிலையில் யாஷ் உடைய பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வருவதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். அது என்னவென்றால், கே ஜி எஃப் கேஜிஎஃப் படத்தின் வெற்றியைதொடர்ந்து யாஷ் ரசிகர்கள் பலரும் யாஷை சந்தித்து செல்பி எடுத்து செல்கிறார்கள்.

சீரியல் நடிகை ஆனந்தி போட்ட பதிவு:

அப்போது யாஷின் பாடிகாட் ரசிகர்களை முரட்டுத்தனமாக தள்ளிவிட்டு மிரட்டியும் அனுப்புகிறார்கள். இதை பார்த்த யாஷ் அந்த பாடிகாடை கண்டித்து என்னுடைய ரசிகர்களை இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று கூறுகிறார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் யாசின் குணத்தைப் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நடிகை ஆனந்தியும் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர், இதனால் தான் உங்களை தமிழ்நாடும் நேசிக்கிறது ராக்கி பாய் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement