டிமான்டி காலணி இரண்டாம் பாகம்,இயக்குனரே அறிவித்த அறிவிப்பு – யார் யார் இருக்காங்கன்னு பாருங்க.

0
380
demonty
- Advertisement -

அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருந்த டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருள்நிதி. மேலும், அருள்நிதி வேற யாரும் இல்லைங்கை,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதோடு முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் உதயன், மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவருடைய சில படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இருந்தாலும், இவர் தன்னுடைய விடா முயற்சியினால் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அருள்நிதி 2015ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிழ் என்ற ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் தான் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையும் பாருங்க : ‘மூடிட்டு போடி, சனியன், எனக்குன்னே வருவாளுக’ – சீரியல் நடிகையை திட்டி தீர்த்த காஜல். இதான் காரணம்.

- Advertisement -

டிமாண்டி காலனி படம்:

இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் டிமாண்டி காலனி. இந்த படம் முழுக்க முழுக்க திகில் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனந்த், அபிஷேக் ஜோசப் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து திரைப்பயணம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. அதோடு அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இதன்பிறகு அஜய் ஞானமுத்து நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது. அந்த அளவிற்கு இவர் பிரபலமாவதற்கு இப்படம் தான் உதவியாக இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இயக்குனர் அஜய் ஞானமுத்து போட்ட பதிவு:

மேலும், இந்த டிமாண்டி காலனி வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து மே 22ஆம் தேதி படக்குழுவினர் கொண்டாடி இருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த படத்தை நான் இயக்கப் போவதில்லை. என்னிடம் உதவியாளராக இருந்த வெங்கி வேணுகோபால் தான் இயக்க இருக்கிறார்.

டிமான்டி காலனி 2 குறித்து சொன்னது:

மேலும், அவர் இந்த படத்தின் கதையை எழுதுவதோடு, இந்த படத்தை நான் தான் தயாரிக்க இருக்கிறேன். டிமான்டி காலனி முதல் பாகத்தில் அருள்நிதி இறந்து விடுவதோடு படம் முடிந்து விடும். ஆனால், அதை வைத்து மீண்டும் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி என்று கேள்விக்கு சஸ்பென்ஸாக இருக்கும். ஆனால், முதல் பாகத்தில் நடித்த அருள் நிதி உட்பட முக்கிய கதா பாத்திரங்களும் சில புதிய கதாபாத்திரங்களும் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement