இதலயெல்லாம் என்ன டேக் செய்யாதீங்க. நடிகைகளிடம் வைரலாகும் சேலஞ் குறித்து ஏ ஆர் மகள் போட்ட பதிவு.

0
838
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஜ் அடிக்கடி பல்வேறு சேலஞ்கள் வைரலானது. இதை பொது மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா சமயத்தில் பல்வேறு சேலஞ்கள் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அதிலும் தற்போது கொரோனா சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து பொழுதை போக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

டீ -ஷர்ட் வியர் சேலஞ் மற்றும் பில்லோ வியர் சேலஞ் என்று இரண்டு சேலஞ்கள் வைரலாகி வந்தது. அதை நடிகைகள் அனைவரும் செய்தனர். இந்த நிலையில் தற்போது WomenSupportingWomen என்ற ஹேஷ் டேக் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் சேலஞ் செய்து கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மகள் காதிஜா இது போன்ற சவால்களில் தன்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

அதில், இந்த சவாலில் என்னை டேக் செய்யாதீர்கள். என்னை டேக் செய்துவிட்டு அதை நான் செய்யவில்லை என்றால் யாரும் தவறாக என்ன வேண்டாம். ஒருசிலரை மட்டும் டேக் செய்து விட்டு மற்றவர்களை விட்டுவிடுவதை நான் விரும்பவில்லை. இதை விட சுவாரஸ்யமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அதை இணைந்து செய்வோம் நன்றி என்று பதிவிட்டுள்ளார் காதிஜா.

-விளம்பரம்-
Advertisement