இதனால தான் விசித்ரா ஷூட்டிங் விட்டு போய்ட்டாங்க – அண்டாக்கா கசம் நிகழ்ச்சியில் நடந்த உண்மையை சொன்ன தினேஷ்.

0
577
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி என்று பலர் கலந்துகொண்டனர். பிரபல

-விளம்பரம்-

இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவர் தான் விசித்திரா. இவர் நிகழ்ச்சியில் நன்றாக தான் விளையாடி இருந்தார். சீனியர் என்ற முறையில் இவர் சொன்ன அறிவுரை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பாரட்டை பெற்று இருந்தது.இதுவரை வந்த சீசன்களிலேயே சீனியர் நடிகை 95 நாட்களை கடந்து இருந்தார். அதிலும் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு ஆதரவாக விசித்ரா இருந்தார்.

- Advertisement -

இதனால் மேலும் அவருக்கு ஆதரவு கூடியது. ஆனால், கடைசி சில வாரங்களில் இவர் மாயா கேங்குடன் சேர்ந்து தினேஷ் அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பினார். அதிலும் தினேஷை அடியோடு வெறுத்ததோடு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், பிக் பாஸுக்கு பின்னரும் இவர்களது வெறுப்பு அப்படியே தான் தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் அண்டா கா கசம் 2 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் 7-வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனன்யா, அக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, ரவீனா, தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் தினேஷ் டீமில் ஆடும்படி விசித்ராவிற்கு டீம் அமைந்து இருந்துள்ளது. ஆனால், தினேஷ், விச்சித்ராவுடன் ஒரே டீமில் ஆட மறுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸில் இருந்த போது விசித்திரா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி இருந்தார்.மேலும், தன்னைப் பற்றி சொன்ன கருத்துக்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட காயப்பட்டு இருப்பதாகவும் இதனால் அவர்களுடன் சேர்ந்து விளையாடினால் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் தற்போது திடீரென்று எங்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று சொல்வது ஏதோ நோக்கத்துடன் இருப்பது போல தெரிகிறது.

அதனால் அவர்களுடன் சேர்ந்து ஆடுவது சரியாக படவில்லை என்று தினேஷ் கூறியிருக்கிறார். பின்னர் நிகழ்ச்சி குழு விசித்ராவையும் சமாதானமும் செய்து இருக்கிறது. ஆனால், விசித்திராவோ ‘நான் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட், எனக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா? என்று செட்டை விட்டு சென்று இருக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் ரவீனாவுடன் வந்த அவரது உறவினர் ஒருவரை வைத்து அந்த சூட்டினை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

Advertisement