வாத்தி கம்மிங் பாடலில் வரும் இந்த விஜய் டிவி பிரபலம் யாரு தெரியுமா – கண்டிப்பா இவர் நீங்க பாத்திருப்பீங்க.

0
1184
ranjith
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

-விளம்பரம்-
Kings Of Dance - Watch Episode 22 - Enthralling Dance Battle on ...

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

இதையும் பாருங்க : தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள் – ஜோதிகாவின் கருத்திற்கு மோகன் பதிலடி.

- Advertisement -

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

https://www.facebook.com/ranjithfans/?__tn__=kC-R&eid=ARDb8tNizPy9YpSR_el7za2XbMz3LrOy9Zm0_JBedO0FbV6Ygm2pwtBrbP69VAGhxMFf-idIAGMLiEnX&hc_ref=ARQ8GgrCt0fuEp074H8SdEJp80TMS_W2bVoNavE_0HYh3_1oQcYCWO3e4YBZhgUHQ0w&fref=nf

சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளி வந்திருக்கிறது. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிங்க்ஸ் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியில் தனது நடனத்தால் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தும், அரை இறுதிப்போட்டியில் ஏமாற்றத்தோடு வெளியேறியவர் ரஞ்சித் குமார்.

இதையும் பாருங்க : சௌந்தர்யாவ எப்படி கரெக்ட் பண்றது? ரகசிய கேள்வி கேட்ட விஜய் டிவி பிரபலம். வெளுத்து வாங்கிய பகல் நிலவு சீரியல் நடிகர்.

-விளம்பரம்-

இப்போது, ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலில் ரஞ்சித் குமார் நடனமாடியிருக்கிறாராம். ஆனால், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் நடனமாடியிருக்கிறாரா அல்லது படத்திலும் நடித்திருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement